சென்னை : தமிழ்நாடு விவசாயிகள்& தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத் தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு ஸீ3,900 கோடி அளவுக்கு பல்வேறு பொருட்களின் மீது அதிரடியாக வரியை உயர்த்தி இருக்கிறது. இது பொருட்களின் அபார விலை ஏற்றத்துக்கு வழி வகுத்து விடும். இதனால், சாதாரண சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். எனவே, வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
ஏற்கனவே, விதிக்கப்பட்டிருந்த வாட் வரியை உயர்த்தி இருப்பதன் மூலம் 10 சதவீதம் அளவுக்கு பொருட்களின் விலை உயர்வுக்கான அபாயம் உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு மீண்டும் விலையை உயர்த்தி மக்கள் மீது இன்னொரு தாக்குதலை தொடுத்துள்ளது.
செங்கல், மணல், இரும்பு, சிமென்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை, கடந்த 2 மாதங்களில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமானம் தடைபட்டுள்ளது. லட்சக்கணக்கான கட்டிட தொழிலாளர்களும், அடித்தட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள னர். வரி உயர்வு தொழிலாளர்கள் மீது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல தாக்குதலை தொடுத்துள்ளது அதிமுக அரசு.
அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசுக்கு கடன் சுமை வைத்துவிட்டதாக திமுக அரசு மீது குறை கூறுவதே வாடிக்கையாகி விட்டது. அதே காரணம் காட்டி வரி உயர்வு, நலத்திட்டங்கள் நிறுத்தம், பணியாளர்கள் நிறுத்தம், பணியாளர்களின் சலுகைகள் பறிப்பு போன்ற செயல்களில் அதிமுக அரசு ஈடுபடுவது தொடர் கதையாகி விட்டது. இது, அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு அளிக்கும் தண்டனையாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக