ஊருக்கு ஒரு ரேஷன் கடை தான்! அதுவும் சில குக்கிராமங்களில் அது கூடக் கிடையாது. ஊருக்கு ஒரு அரசு பள்ளிக்கூடம் தான்! அதுவும் சில குக்கிராமங்களில்……!!
ஆனால் டாஸ்மாக்கிற்கு மட்டும் இந்த கணக்கெல்லாம் கிடையாது போலிருக்கிறது. சென்னையில் ரொம்பவே அநியாயம். பல இடங்களில் பத்து தப்படிக்கு ஒரு டாஸ்மாக். ஆனாலும் எல்லா டாஸ்மாக்குகளும் எப்போதும் கூட்டமாகவே இருக்கிறது!
இத்தனை கிலோமீட்டருக்கு ஒரு டாஸ்மாக் தான்! அதுவும் மதியத்திற்கு மேல் தான் விற்பனை என்றெல்லாம் அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். கஷ்டமாக இருக்கிறதா? அனைத்து பொட்டிக் கடைகளிலும் கூட ‘சரக்கு’ விற்கலாம் என்று கொண்டு வந்து விடுங்களேன்!
போகிற போக்கைப் பார்த்தால் பிற்காலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு போல, ‘சரக்கு தட்டுப்பாடு’ ஏற்பட்டு அதனால் அரசாங்கமே கவிழும் அபாயமெல்லாம் ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது!
போதாக்குறைக்கு ‘தவிர்க்க இயலாக் காரணங்களினால்’ இனிமேல் சரக்கின் விலை 10 ரூபாய் அதிகரிக்க உள்ளதாம். 100 ரூபாய் அதிகரித்தாலும் குடிமகன்கள் குறையவா போகிறார்கள்?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக