ஸ்பெக்ட்ரம் ராஜா அதிரடி முடிவு
புதுடில்லி: "2ஜி' வழக்கில் என் மீதான சி.பி.ஐ., விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுக்களை மறுத்து எனக்காக வாதாட விரும்பவில்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, சிறப்பு கோர்ட்டில் தெரிவித்தார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்கள், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டபின், குற்றச்சாட்டுகள் மீதான விவாதங்கள் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா , நீதிபதி ஓ.பி.சைனியிடம் கூறியதாவது: குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை வரும் போது, நான் எனக்காக வாதாட மாட்டேன். நான் அப்படி வாதாடும் பட்சத்தில் நான் தெரிவிக்கும் தகவல்களை வைத்து , சி.பி.ஐ.,. மூன்றாவது குற்றப்பத்திரிகையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, சி.பி.ஐ., விசாரணை முடியும் வரை நான் எனக்காக வாதாட மாட்டேன். இவ்வாறு ராஜா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக