பியூனஸ் அயர்ஸ்: கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனா அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த பயங்கர கார் விபத்தில் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். காரில் அவருடன் பயணித்த காதலியும் காயமடைந்தார்.
இவர்கள் சென்ற கார் படு வேகமாக போய் ஒரு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
மாரடோனாவின் 81 வயதான தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தபோதுதான் மாரடோனா விபத்துக்குளாகி விட்டார். பியூனஸ் அயர்ஸில் உள்ள தனது வீட்டுக்கு அருகிலேயே விபத்துக்குள்ளானார் மாரடோனா. உடனடியாக மீட்கப்பட்ட அவரும், அவரது காதலியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இருவரும் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் கடும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாரடோனாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும், அவரது காதலிக்கு இடுப்பில் காயமேற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனாக, அணியின் பயிற்சியாளராக செயல்பட்டவர் மாரடோனா. விரைவில் அவர் ஐக்கிய அரபு எமிரேடிஸில் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக