பாதுகாப்புக்கு என அங்கே பொலிசார் செல்வது வழக்கம். ஆனால் இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி விஸா இல்லாத தமிழர்களைப் பிடிக்கும் இடமாக தற்போது பொலிசாரால் மாற்றப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடையமாகும். விஸா நிராகரிக்கப்பட்ட மற்றும் விஸா இல்லாத பல தமிழர்கள் இங்கே தமது வேண்டுதலுக்காச் செல்வதை பொலிசார் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகங்கள் தற்போது வலுப்பெற்றுள்ளது. ஒரு தொழுகை புரியும் இடத்தில் அதுவும் ஒரு கிறிஸ்தவக் கோயில் வழாகத்தில் வைத்து இவ்வாறு தமிழர்கள் கைதுசெய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும்.
கடந்த ஞாயிறு அன்று சுமார் 35 இலங்கைத் தமிழர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கை கலப்புகள் அல்லது பிரச்சனை ஏற்படுத்திய நபர்கள் கைதாவது குறித்து எவரும் எதுவும் கூறமுடியாது. ஆனால் மத வழிபாடு இடம்பெறும் இடத்தில் இவ்வாறு விசா இல்லாத ஆட்களை தேடி அலையும் பிரித்தானியப் பொலிசாரின் அராஜகம் நிறுத்தப்படவேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள். சம்பந்தப்பட்ட நபர்கள் இது குறித்து கவனம் செலுத்துவது நல்லது. அப்படி விஸா இல்லாத தமிழர்களைப் பிடிப்பதாக இருந்தால் அது கோயிலுக்கு வெளியே இல்லை நெடுஞ்சாலையில் அதனைச் செய்யலாம். புனித இடங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக