ராம்கி - நிரோஷாவின் வீடுகள் ஆகஸ்ட் மாதம் ஏலத்துக்கு வருகின்றன. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செந்தூரப்பூவே படத்தில் ஜோடியாக நடித்தனர் ராம்கியும் நிரோஷாவும். தொடர்ந்து பல படங்களில் இவர்கள் ஜோடியாக நடித்தனர். அதில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ஜெமினி பார்சன் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் கணவன்- மனைவியாக வசித்து வருகிறார்கள்.
இந்த அபார்ட் மெண்டில் இவர்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், கார்ப்பரேஷன் வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை. இதனால் பாங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை கோடியை தாண்டியது.
இதையடுத்து வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன அந்த வங்கிகள். நிரோஷா-ராம்கி வீடுகள் அடுத்த மாதம் 18-ந்தேதி பகல் 1 மணிக்கு பகிரங்க ஏலத்தில் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச ஏல கேட்பு தொகை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக