செவ்வாய், 12 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி பிரச்சனையும், வரிச்சுமையும் வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசின் பரிசு: கலைஞர்

சமச்சீர் கல்வி பிரச்சனையும், வரிச்சுமையும் வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசு அளித்துள்ள பரிசு என, திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கலைஞர், திமுக திராவிடர்களின் நலனுக்காக எப்போதும் பாடுபடும் இயக்கம் என்று கூறினார்.

விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு வரிகளில் அதிமுக அரசு மாற்றம் செய்து சுமையை ஏற்றி இருப்பதும், சமச்சீர் கல்வி பிரச்சனையில் பள்ளிகள் திறந்து இரண்டு மாதமாகியும், பாடம் படிக்க இயலாமல் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளாடுவதற்கும் அதிமுக அரசுக்கு வாக்களித்த மக்களே காரணம் என்று கலைஞர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்படும். மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்தும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: