வெள்ளி, 15 ஜூலை, 2011

கோவையில் கல்லால் அடித்துக் கொன்றிருக்கிறார்கள், நட்ட நடு ரோட்டில் 4 குடிகாரர்கள் சேர்ந்து



கோவையில் பட்டப்பகலில் நட்ட நடு ரோட்டில் 4 குடிகாரர்கள் சேர்ந்து இன்னொரு சக குடிகாரனை ஓட ஓட விரட்டி கல்லால் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இந்தக் காட்சியும் அங்கே இருந்த காவல்துறையின் விடியோ கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. அருகில் சிக்னலில் காத்திருக்கும் மக்கள் அப்படியே பார்த்தவாறு கடந்து செல்கிறார்கள். குண்டு வெடிப்பையும், கலவரத்தையுமே கடந்தவர்களாயிற்றே?!
இறந்த போன குடிகாரரின் குடும்பத்தினர் அரசு உதவித் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டும் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அரசு வேலை என்றால் – டாஸ்மாக்கிலா?! வர வர நம்ம மக்களின் எதிர்பார்ப்புக்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது. குடிகாரக் கும்பலுக்குள் அடித்துக் கொண்டதில் சாராயம் விற்ற குற்றத்திற்காக அரசு நஷ்ட ஈடும், வேலையையும் வழங்க வேண்டுமா? நாக்கு வெட்டி வேலை வாங்கியதற்கும் சற்றும் குறைவில்லாத கோரிக்கை இது!
ஊடகங்களையும் இந்த விஷயத்தில் குற்றம் சாட்ட வேண்டும். காவல்துறை விடியோவை அப்படியே ஒளிபரப்பி பரபரப்பைக் கூட்டிக் கொண்டிருக்கின்றன. சினிமாவை விட டி.வி.க்கு தான் சென்சார் தேவை போலருக்கிறது

கருத்துகள் இல்லை: