வியாழன், 14 ஜூலை, 2011

கனிமொழி மேலே எந்தத் தவறும் இல்லை முழுக்க முழுக்க ஜோடித்த வழக்கு.

பிரணாப் முகர்ஜியிடம் கலைஞர் திட்டவட்டமா ஒரு விஷயத்தைப் பேசியிருக்காராம்.''

""என்ன விஷயம்?''

""2ஜி விவகாரத்தில் கனிமொழி மேலே எந்தத் தவறும் இல்லை. கடன் தொகையை லஞ்சம்னு சொல்லி, அவர் மீது பழி போடுவது, முழுக்க முழுக்க ஜோடித்த வழக்கு. தன் மீது குற்றமில்லைங்கிறதை அவர் நிரூபிச்சி, பெயிலில் வந்ததும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரணும்ங்கிறதுதான் பிரணாப்பிடம் கலைஞர் வலியுறுத்திய விஷயம். கேஸ் பெண்டிங்கில் இருக்கும்போது, பெயிலில் வந்தவருக்கு பதவி தரமுடி யுமாங்கிறது பற்றியெல்லாம் டிஸ்கஷன் நடந்திருக்கு. ஜெயலலிதா மேலே சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கிற நிலையில் அவர் முதல்வரா இல்லையான் னும், ஏற்கனவே அவர் சிறைக்குப்போய் பெயிலில் வந்து, கேஸ் பெண்டிங்கில் இருக்கும்போது பதவி ஏற் கலையான்னும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கு.''

""கனிமொழி, பெயிலுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். தயாநிதி மாறன் விஷயத்தில் சி.பி.ஐ இன்னும் அவரை விசாரிக்கலையே..''

""சி.பி.ஐ. இந்த விவகாரத்தில் ரொம்ப தீவிரமா இருக்குங்க தலைவரே... டெல்லித் தரப்பிலிருந்து என்ன சொல்றாங்கன்னா, தயாநிதி சம்பந்தப்பட்ட புகார்கள், அது தொடர்பா கிடைத்திருக்கிற ஆவணங் கள் ஆகியவற்றை அலசி ஆராய்வதோடு சிவசங்கரன் வாக்குமூலத்தில் இடம்பெற்றிருக்கிற நபர்களுக்கு சம்மன்கள்னு வேகவேகமா நடவடிக்கைகள் நடந்துக் கிட்டிருக்கு. அதன்பிறகு, எந்த நேரமும் தயாநிதியை விசாரணைக்குக் கூப்பிடலாம்ங்கிறதுதான் டெல்லி நிலவரம்னு சொல்றாங்க.''

கருத்துகள் இல்லை: