பாஜகவுக்கு கர்நாடகாவில் சாதகமான நிலைமை இல்லை .. உளவுதுறை இரகசிய அறிக்கை..?
Veera Kumar Oneindia : கர்நாடகா சட்டசபை தேர்தல்: பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்- எடியூரப்பா நம்பிக்கை பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, துவங்கியது கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு
Veera Kumar Oneindia : கர்நாடகா சட்டசபை தேர்தல்: பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்- எடியூரப்பா நம்பிக்கை பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, துவங்கியது கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு
பெங்களூர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல்
இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் காலை 7.05 மணிக்கெல்லாம் பாஜக முதல்வர் வேட்பாளர்
பி.எஸ்.எடியூரப்பா வாக்களித்தார்.
ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார் பாஜகவின் முதல்வர்
வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா.
இன்று வாக்குப்பதிவு தினம் என்பதால், எடியூரப்பா காலை 6 மணிக்கெல்லாம் தனது
வீட்டு பூஜையறையில் பூஜை செய்தார். அதில் குடும்பத்தார் பங்கேற்றனர்.
வரிசையாக பூஜைகள்
வரிசையாக பூஜைகள்
பிறகு, வீட்டுக்கு அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சிறப்பு
பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தார். அப்போது அவரது மகன் விஜயேந்திராவும்
உடனிருந்தார்.
எடியூரப்பா
இதையடுத்து 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், முதல்நபராக சென்று
வாக்களித்தார் எடியூரப்பா. இத்தனை நிகழ்வுகளின்போதும் எடியூரப்பாவின் முகம்
ஏனோ டல்லாக இருந்தது.
எடியூரப்பா பேட்டி
எடியூரப்பா பேட்டி
தனது கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டிய எடியூரப்பாவின் முகமே
தொங்கிப் போய் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓட்டளித்த பிறகு, நிருபர்களிடம்
எடியூரப்பா கூறுகையில், பாஜக 150 தொகுதிகளின் வெற்றி பெற்று ஆட்சியை
பிடிக்கும், கர்நாடகாவில் எனது தலைமையில் ஆட்சி அமையும். இத்தேர்தலில்
காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு
தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு
இருப்பினும், மே 17ம் தேதி முதல்வராக பதவியேற்பேன் என்று தேர்தலுக்கு
முன்பே அறிவித்த எடியூரப்பா முகம் ஏன் சோகமாக உள்ளது என்ற கேள்வி
கர்நாடகாவில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே புத்தூர் தொகுதியில்,
முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான சதானந்தகவுடா வாக்களித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக