வியாழன், 10 மே, 2018

தம்பி மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!

செல்வகுமார்  nakkeeran:
esthernelஇரண்டு வயது குழந்தைக்கு தாயான பெண்ணை கை, கால், தலை என தனித்தனியாக வெட்டி கோரையாற்றில் வீசிய சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலவண்டச்சேரியை சேர்ந்தவர் ஜோசப்ராஜசேகர், இவரது மனைவி எஸ்தர். இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்து, இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. ஜோசப்ராஜசேகருக்கு நெல்சன், மற்றும் அற்புதராஜ் என்கிற சகோதரர்களும், ஜாக்குலீன் என்கிற சகோதரியும் உள்ளனர். அற்புதராஜ் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். ஜோசப் ராஜசேகர் சிங்கப்பூரில் வேலைப் பார்த்து வருகிறார். எஸ்தர் தனது குழந்தையோடு கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
எஸ்தர் மீது ஜோசப்ராஜசேகரின் அண்ணன் நெல்சனுக்கு ஆசை இருந்துள்ளது. இதை நெல்சனின் மனைவியே கண்டித்திருக்கிறார்.
இந்தநிலையில் கடந்த 6 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி அளவில் எஸ்தரின் உறவுக்காரர் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்துள்ளார். அப்போது எஸ்தரின் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, எஸ்தர் தூங்குறாங்க, என்றிருக்கிறார் நெல்சன். எழுப்பிவிடுங்க, நான் அவங்க கையில் தான் பத்திரிகைய கொடுக்கனும்னு கூறியிருகிறார் வந்தவர்.நெல்சன்

அசந்து தூங்குறாங்க நீங்க எங்கிட்ட கொடுங்க என மீண்டும் பிடிவாதமாக கூற, பத்திரிகையை எடுக்கும் போது சாப்பிட்ட சாப்பாடு பாதித் தட்டோடும், ஈக்கள் மொய்த்துக்கொண்டு துர்நாற்றம் வீசுவது போலவும் இருப்பதை பார்த்தவர், பத்திரிகையை கொடுக்காமல், சடசடவென வெளியே வந்து, எஸ்தரின் தந்தை ஆரோக்கியசாமிக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

பதறித்துடித்துக்கொண்டு வந்தவர்களிடம், உங்க பொண்ணு நீடாமங்கலத்தில் உள்ள ஒருவனை இழுத்துக்கிட்டு ஓடிட்டா என்று திமிறாக பதில் கூறியிருக்கிறான் நெல்சன். எஸ்தரின் தந்தை ஆரோக்கியசாமியும் அவரது உறவினர்களும் அருகில் உள்ள தேவங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

காவல் துறையினர், புகாரை வழக்கம்போல் அலட்சியபடுத்திவிட்டனர். பிறகு ஆரோக்கியசாமி உறவினர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு நேற்று 8ம் தேதி மாலை நெல்சனை அழைத்து வந்து விசாரித்தனர்.

’’எஸ்தர நான் தான் கொலை செய்து நாகப்பட்டினம் கடற்கரையின் கல் இடுக்குல போட்டுட்டேன்’’ என்று கூற, போலீசார், நெல்சனை அழைத்துக்கொண்டு நாகைக்கு போனார்கள், அங்கு எஸ்தரின் உடல் இல்லை, என்பதும், அலைகழிக்கிறான் என்பதை போலீஸார் புரிந்துக்கொண்டு தகுந்த டிரீட்மெண்ட் கொடுத்தப்பிறகே கோரையாற்றில் மூன்று சாக்கு மூட்டையாக போட்டிருப்பதை காட்டினான்.

அதன் பிறகே நெல்சனை கைது செய்துள்ளது காவல்துறை, இந்த கொலையை ஒரே ஆளாக செய்திருக்க முடியாது, அவர்களின் குடும்பமே இதில் தொடர்பு அவர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை எஸ்தரின் உடலை வாங்கமாட்டோம், என மீண்டும் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்சனுக்கு அதரவாக திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் வந்திருப்பதை கண்டு எஸ்தரின் உறவினர்களும் பொதுமக்களும் கோபமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: