dinamani :சென்னை: ரஜினியும் மோடியும் ஒன்று
சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி
அமைக்கலாம் என்று 'துக்ளக்' இதழின் ஆசிரியர் : ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 'பிக்கி' அமைப்பு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் 'துக்ளக்' இதழின் ஆசிரியர் : ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் பொழுது கூறியதாவது:
அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பது போல் தெரியவில்லை; இருந்தால் பார்க்கலாம் .நீட் குறித்து முழுபுரிதல் யாருக்கும் இல்லை என்பதால்தான் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்று கூறப்படுவது உண்மையாக இருந்தால் எனக்குப் பெருமைதான். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்.ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம்.
கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன் காவிரி பிரச்னையில் வேறு சிந்தனையுடைய கர்நாடகா, கேரளா பேசி முடிவுக்கு வர வேண்டும். கர்நாடக தேர்தலை கருதி காவிரி திட்டவரைவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக