
நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பு

இதைத்தொடா்ந்து இன்று காலையில் மொினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.&> ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை தாங்கி அடிக்கல் நாட்டுகிறார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக