செவ்வாய், 8 மே, 2018

ஆவேசம்! எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள்... வரி வருவாய் பகிர்வில் மத்திய அரசு மீது சரமாரி புகார்

தமிழ் நாட்டிற்கு தான் அதிக நிதி பாக்கி கொடுக்கப்படாமல் இருக்கிறது அப்படி இருந்தும் இந்த அடிமை தமிழக அரசு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால் இந்த கூடத்தில் கலந்து கொண்டால் உங்களின் ஆட்சி கலைக்கப்படும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கும் அதனால தான் கலந்து கொள்ளவில்லை இந்த தமிழக அடிமை அரசு....
தினமலர் :விஜயவாடா : பா.ஜ., ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதில், மத்திய வரி வருவாயை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்கு பிரித்து தரும் முறையை, மத்திய அரசு திரும்ப பெறும்படி கோரிக்கை
வைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு, கூட்டாட்சி முறைக்கு எதிராக செயல்படுவதாகவும், சரமாரியாக குற்றம்சாட்டப்பட்டது.எதிர்க்கட்சி,ஆளும் மாநிலங்களின்,நிதி அமைச்சர்கள்,ஆவேசம்! ,வரி வருவாய் பகிர்வில்,மத்திய அரசு,சரமாரி புகார்" பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில், மத்திய வரி வருவாயை பிரித்து தரும் நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மக்கள் தொகை:: இந்நிலையில், இவர்களது இரண்டாவது கூட்டம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், நேற்று நடந்தது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டில்லி துணை முதல்வர், மனிஷ் சிசோடியா, பஞ்சாப் நிதி அமைச்சர் மன்ப்ரீத் சிங், கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், மேற்கு வங்கத்தில் இருந்து அமித் மித்ரா, கர்நாடக மாநில நிதி துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில், தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தரப்பில் இருந்து, யாரும் பங்கேற்கவில்லை. ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடு, கூட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

மத்திய அரசு வசூல் செய்யும் வரிகள், இதுவரை, 1971ம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்
மாநிலங்களுக்கு வரி வருவாயாக பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், 15வது நிதி ஆணைய பரிந்துரையின்படி, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போது பகிர்ந்தளிப்பதால், வளர்ந்து வரும் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

முன்னிலை :

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் கேரளா முன்னிலையில் உள்ளது. ஆந்திராவிலும், பல முயற்சிகள் மேற்கொண்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வருகிறோம். மாநிலத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்து செல்லும் மாநிலங்களை, இப்படி தண்டிப்பது, எந்த வகையில் நியாயம்.

இந்த அநீதியை பொறுக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். சிறப்பாக செயலாற்றுவோரை தண்டித்துவிட்டு, செயல்படாதோருக்கு வாரி வழங்கும் செயலை தான், மத்திய அரசு செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்ற, பஞ்சாப் மாநில நிதி அமைச்சர், மன்ப்ரீத் சிங் பேசியதாவது: உணவு உற்பத்தியில், எங்கள் மாநிலம் முன்னோடியாக இருந்தாலும், மத்திய வரி வருவாயை பெறுவதில், அநீதியை சந்தித்து வருகிறோம். மத்திய வரி வருவாயில், எங்களுக்கு, 29 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு அதிகம் வழங்கப்படுகிறது. கூட்டாட்சி முறைக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது.

ஜி.எஸ்.டி.,க்கு பின், மாநில அரசுகளின் வரி வருவாய் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில், மத்திய அரசிடம் நிதி கேட்டு நிற்பது, தர்மசங்கடமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரம் :

டில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான, மனிஷ் சிசோடியா பேசுகையில், ''எல்லா அதிகாரங்களையும் < கையில் வைத்துக் கொள்ள மத்திய அரசு விரும்புகிறது; இது அரசியல்சாசனத்திற்கு எதிரானது. ''மத்திய அரசு எங்களுக்கு ஒதுக்கும் நிதி, பற்றாகுறையாக தான் உள்ளது,'' என்றார்.

ஆந்திர மாநில நிதி அமைச்சர், ஒய்.ராமகிருஷ்ணடூ பேசியதாவது: இந்த 15வது நிதி ஆணைய பரிந்துரையின்படி, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதால், ஆந்திராவுக்கு மட்டும், ஆண்டுதோறும், 8.000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதைப் போல, தமிழகம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

'வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை' :
விஜயவாடாவில் நேற்று நடந்த கூட்டத்தில், காங்., மூத்த தலைவரும், புதுச்சேரி முதல்வருமான, நாராயணசாமி பேசியதாவது: மத்திய வரி பகிர்ந்தளிப்பில், 15வது நிதிக் குழு பரிந்துரையை பின்பற்றுவது, மாநில உரிமைகளை நசுக்குவதாக உள்ளது. இதனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற, மாநில அரசுகள் திண்டாட வேண்டி உள்ளது. மத்திய அரசு, முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளை கலந்தாலோ சிக்க வேண்டும். அப்படி செய்யாத அரசை, கூட்டாட்சி மீது நம்பிக்கையற்ற அரசாகத் தான் பார்க்க முடியும். யூனியன் பிரதேசங்களின் மீதான மத்திய அரசின் பார்வை, சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. ஜி.எஸ்.டி., விஷயத்தில், எங்களை மாநிலங்களைப் போல நடத்துகின்றனர். நிதி பங்கீட்டின் போது, யூனியன் பிரதேசமாக நடத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.