விகடன் விகடன் :கே.குணசீலன்- ம.அரவிந்த் :
தமிழக மாணவர்கள் நீட் தேர்வில்
தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு வெளி மாநிலங்களில் தேர்வு
மையத்தை ஒதுக்கியதாக தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி குற்றம்
சாட்டினார்.
தஞ்சாவூரில் திமுக சார்பில் தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க.
மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் நடடைபெற்றது. தி.மு.க. மகளிரணி
மாநிலச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி இதில் கலந்து கொண்டு
பேசினார். அப்போது பேசிய அவர் `நீட்
தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வேண்டாம்
என்று தி.மு.க. போராடி வருகிறது. இந்த நேரத்தில் நீட் தேர்வு மையம் போதிய
அளவில் தமிழகத்திற்கு ஒதுக்கப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு
வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததன் மூலம், அவர்கள் பல்வேறு
சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்.
மேலும் ராஜஸ்தான் செல்லும் ரயில் தாமதமாக சென்றதால் அங்கு தேர்வு எழுத
சென்ற மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
முத்தலாக் தடைசட்டம், நீட் தேர்வு போன்றவற்றை கொண்டு வந்த மத்திய அரசுக்கு
எதிராக தி.மு.க. போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக முத்தலாக் தடைசட்டம்
அமல்படுத்தப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் நோக்கம். நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று முதன் முதலில் வலியுறுத்தியது தி.மு.க. தான். நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்வதால் 1 சதவீத தமிழக மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 சதவீதம் பாதிப்பு என்றாலும் அது பாதிப்புதானே?. அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?. நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 37 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறார்கள். தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர் என்பது தெரியும். அதற்கு ஏற்ப போதிய மையங்களை தமிழகத்தில் ஒதுக்காதது ஏன்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக