
கொண்டு வந்துள்ளார் அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
நதிநீர் கொள்கைகளில் பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்ற காங்கிரஸ்
தலைமையிலான அரசின் அதே கொள்கையைத்தான் பாஜகவும் பின்பற்றி வருகிறது.
உதாரணம், காவிரி பிரச்சினை. உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும், காவிரி தொடர்பான
இறுதி தீர்ப்பை அமல்படுத்த இன்னும் திட்டம் வகுக்கவில்லை. கர்நாடக
தேர்தல்தான் இதற்கெல்லாம் காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்
செய்தபோது,கர்நாடக
தேர்தலுக்காகவே காவிரி விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்று
கூறிய தமிழிசை, அடுத்து கூறியதுதான் டாப், "இது எல்லா கட்சிகளும் செய்யும்
அரசியல்தான்" என்றும் கூறியுள்ளார். பாவம், அமித்ஷா. "party with
difference" என ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூனில் ஓட்டை போட்டு டமால் என
உடைத்துவிட்டார் தமிழிசை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக