வியாழன், 10 மே, 2018

கொலிஜியத்தை கூட்டுங்கள் - தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்

உடனே கொலிஜியத்தை கூட்டுங்கள் - தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்
செல்லமேச்வர்
மாலைமலர் :சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உடனே கொலிஜியத்தை கூட்ட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார். நீதிபதி செல்லமேஸ்வர்</ புதுடெல்லி:< சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.



இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.< கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கூடிய கொலிஜியம் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அடுத்த மாதம் 22-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கூறிய நீதிபதிகளில் ஒருவராவார்.
> 2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன

கருத்துகள் இல்லை: