வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக வின் தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஒரு பகுதியில் பாஜக பிரமுகர் தங்கியுள்ள பிளாட்டில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று அங்கு சோதனை மேற்கொண்டனர். அங்கு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், பிரிண்டர்கள் , லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் போலி அல்ல, உண்மையானது தான். இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். காங்கிரஸ் கூறிய புகாரில் உண்மையில்லை. காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முனி ரத்னாநாயுடு தோல்வி பயத்தில் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார் என பாஜக தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக