ஞாயிறு, 6 மே, 2018

சீட் கிடைக்காமல் ரயிலில் நின்று கொண்டே பயணித்த கிருஷ்ணசாமி தேர்வு மையத்தை தேடியும் அலைந்தார்

Shyamsundar- Oneindia Tamil  சென்னை: நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவர் நேற்று இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்ததாக கூறப்படுகிறது.
 திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனுடன் கேரளாவின் எர்ணாகுளம் சென்றவர், மகனை தேர்வு அறைக்கு அனுப்பிவிட்டு, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இரவு முழுக்க பயணம் செய்து, மகனுடன் காலையில் தூங்காமல், தேர்வு அறையை கண்டுபிடித்த அலைச்சலில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு கடைசி நேரத்தில் வேறு மாநிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக அவசரம் அவசரமாக கேரளா செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் இவர்களுக்கு தட்கலில் கூட டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் பணமும் இல்லாமல், ரயிலில் முன்பதிவு செய்யாமல், சாதராண பெட்டியில் பயணித்து இருக்கிறார்கள் கிருஷ்ணசாமியும், அவரது மகனும். நேற்று முழுக்க இவர் தூங்காமல் நின்று கொண்டே பயணித்து இருக்கிறார். இதனால் இவரது உடல்நிலை மோசமாகி உள்ளது. இதன் காரணமாகவே இவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும் அலைச்சலும், மன உளைச்சலுமே இவரது மரணத்திற்கு காரணம் என்பது தெள்ள தெளிவாக தெரிந்துள்ளது.

கருத்துகள் இல்லை: