வியாழன், 10 மே, 2018

மலேசியா மகதீர் மொகமத் மீண்டும் பிரதமரானார் .. 92 வயதில்.. 22 ஆண்டுகள் ஆட்சி..

சுகன்யா பழனிச்சாமி - விகடன் :
மகதீர் முகமது
மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பி.என் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மகதீர் முகமதுவின் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. தனது அரசியில் ஓய்வை விலக்கி, மீண்டும் பிரதமரானார் மகதீர் முகமது.
மலேசியா பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக். இவரின் தலைமையிலான அரசு, நிதி முறைகேடுகளைச் செய்துள்ளதாகவும், சர்வதேச அளவில் மலேசியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மொத்தம் 223 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில், 112 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிதான் ஆட்சியமைக்க முடியும். இந்தத் தேர்தலில் 115 இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது முன்னாள் பிரதமர் மகதீர் முகமதின் கூட்டணி.

1981-ம் ஆண்டில் இருந்து மலேசியாவில் 22 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் மகதீர் முகமது. தனது 92-வது வயதில் மீண்டும் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மக்களால் உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் வயதில் மூத்தவர் என்ற பெருமையை இந்தத் தேர்தல் வெற்றியின்மூலம் மகதீர் முகமது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மக்கள் மனதுபோல் நல்ல தலைவர் மலேயா நாட்டிற்கு கிடைத்தது புண்ணியமே இயேசுவுக்கே நன்றி