ஜெயலலிதாவின் ‘கொடநாடு அவதூறு’: கருணாநிதி, ஸ்டாலினுக்கு சம்மன்!
Viru News“முதல்வர்
ஜெயலலிதா கொடநாட்டில் மாதக்கணக்கில் ஓய்வு நிலையில் இருப்பது தொடர்பாக
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்ட
கருத்துக்கள், முதல்வருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயரை துவம்சம்
செய்துவிட்டன” என தொடரப்பட்ட அவதூறு வழக்கு, உயிருடன்தான் உள்ளது. இந்த
வழக்கு தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இன்று கோர்ட் சம்மன் அனுப்பப்பட்டது.
இவர்களுக்கு
மட்டுமின்றி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர்
ராமதாஸ் ஆகியோருக்கும் கோர்ட் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் பிற கட்சிகளின்
தலைவர்கள் யாரும், கொடநாடு பற்றி இதுவரை பேசவில்லை என்பதால், முதல்வரின்
நற்பெயர் கெடவில்லை. இன்னமும் வழக்கு பதிவாகவில்லை.
சமுதாய நற்பெயர் கெட்டுப்போனது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் இந்த அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. நீதிபதி கலையரசன் முன்பு இன்று இவை விசாரணைக்கு வந்தன. இதனை விசாரித்த நீதிபதி, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அக்டோபர் 10-ம் தேதியும், ராமதாஸ் அக்டோபர் 9-ம் தேதியும், விஜயகாந்த் அக்டோபர் 15-ம் தேதியும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
அவதூறு செய்திகளை வெளியிட்ட சில பத்திரிக்கைகளும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகுமாறு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்ட கோர்ட் சம்மன்களுக்கு, “தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பணிகள் தலைக்குமேல் இருப்பதால், வரமுடியவில்லை.. சாரி” என்று பதில் அனுப்பப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக