வியாழன், 23 ஆகஸ்ட், 2012

சுரங்க ஒதுக்கீட்டு பிரச்னையில் பிரதமருக்கு எவ்வித தொடர்பும் இல்லை'

புதுடில்லி:""நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விஷயத்தில், பிரதமருக்கு எந்த தொடர்பும் இல்லை,'' என, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.
மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியதாவது:தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடு நடந்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் பெரும் அமளியை ஏற்படுத்துகின்றன. இதில், பிரதமருக்கு தொடர்புள்ளதாகவும், புகார் கூறுகின்றன. இந்த விவகாரத்தில், பிரதமருக்கு எந்த தொடர்பும் இல்லை. இதற்காக, அவர் பதவி விலக வேண்டிய அவசியமும் இல்லை.நிலக்கரி சுரங்கங்களை, ஏலத்தின் மூலம், ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய, மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாகவே, சுரங்க ஒதுக்கீட்டில் ஏல நடைமுறையை அறிமுகப்படுத்த முடியவில்லை.

இதில், பா.ஜ., ஆளும் மாநிலங்களும் உள்ளன. எனவே, சுரங்க ஒதுக்கீட்டில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதில், பா.ஜ.,வுக்கும் தொடர்பு உள்ளது.இதை புரிந்து கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்குகின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை தெரிவிப்பதற்கு, அரசு தரப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்

கருத்துகள் இல்லை: