அரசகுடுப்த்தினரின் செய்தி என்றாலே ஊடகங்களுக்கு அல்வா
சாப்பிடுவது மாதிரி ஏதாவது சிக்காதா என்று காத்துக்கொண்டிப்பார்கள்.
வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தமாதிரி வசமாக சிக்கியது இளவரசர்
ஹாரியின் நிர்வாண புகைப்படம். விடுவார்களா என்ன இணையதளங்களில் பரப்பிவிட்டு
விட்டார்கள்.
இளவரசர் ஹரியும் இளம் பெண் ஒருவரும் அமெரிக்காவின்
லாஸ் வேகாஸ் நகர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரும்
நிர்வாணமாக இருக்கும் படங்கள் எப்படியே கைக்கு சிக்கவே கிசுகிசுவுக்கு பேர்
போன TMZ இணையதளம் வெளியிட்டிருக்கிறது. இந்த படங்கள்தான் அமெரிக்க
இணையதளங்களில் இன்றைக்கு ஹாட் டாபிக். இந்த படங்களை 68 மில்லியன் மக்கள்
இந்த படங்களை பார்த்து கமெண்ட் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.படத்தில் இருப்பவர் இளவரசர் ஹரி தான் என்பதை அரச குடும்பத்தின் செய்தி தொடர்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இதுபற்றி கருத்துக்கள் எதனையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த இரண்டு படங்களும் கடந்த வெள்ளியன்று எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரிட்டனில் அடுத்த இளவரசராக பிரகடனப்படுத்தப்படுபவர்களின் வரிசையில் மூன்றாவதாக இருப்பவர் இளவரசர் ஹரி. இளவரசர் ஹரி வார விடுமுறையை கழிக்க சென்றிருந்த போது நண்பர்களை ஹோட்டலுக்கு வரவழைத்திருந்த நிலையில் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.இந்தப் படங்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பது பற்றி விளக்கம் இல்லை. எனினும் மொபைல்போன் கேமரா மூலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இளவரசர் ஹாரி சிக்கலில் சிக்குவது இது முதன் முறையல்ல ஏற்கனவே 2005-இல் நண்பர் ஒருவரின் விநோத உடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இளவரசர் ஹரி, நாஜி ஒருவரைப் போல உடை அணிந்தபடி வெளியான படத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அதேபோல் 2009-இல், அவரது இராணுவ படைப்பிரிவிலுள்ள ஆசிய நாட்டவர் ஒருவரின் மனம் புண்படும்படியாக, கூடாத வார்த்தையை பயன்படுத்துகின்ற வீடியோ காட்சி வெளியானதை அடுத்து இளவரசர் ஹரி மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஊடகங்களில் பெரும்பாலும் வெளியாகியுள்ள இந்தப் படங்கள் இங்கிலாந்து பத்திரிகைகளில் இன்னும் வெளியானதாக தெரியவில்லை. தடை செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இது பிரிட்டன் அரச குடும்பத்தின் பெருமையை குலைக்கச் செய்யும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்றும் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம் என்றும் இளவரசரும், ஹாரியின் தந்தையுமான சார்லஸ் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக