திங்கள், 20 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் வதந்தியை பரப்பிய 250 இணையதளங்களுக்கு தடை

இந்தியாவில் வடகிழக்கு மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் இணையதளங்கள் மூலம் வதந்திகளைப் பரப்பி வருவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வதந்திகளை பரப்பிய 250 இணையதளங்களை தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.இதுவரை 130 இணையங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது, மீதி விரைவில் தடைசெய்யப்படவுள்ளது முஸ்லிம்களின் கோபத்தை தூணிவிடுமாறு படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டதுதான் நாட்டில் வடகிழக்கு மக்கள் மீதான தாக்குதல்களுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு படங்களை இதுபோன்று உருவாக்கி, வீடியோக்களை போலியாகத் தயாரித்து அதனை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.மேலும் டுவிட்டர், யூடியூப் ஆகியவற்றிலும் இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் முஸ்லிம்களின் கோபத்தைத் தூண்டிவிடுவதும் நாடு முழுதும் விரவிக் கிடக்கும் வடகிழக்கு மக்களை அச்சுறுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஜூலை 13ஆம் தேதி முதல் இந்த ஆன்லைன் விடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டு வரப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ங்களூரு, சென்னை, புனே, மும்பை ஆகிய நகரங்களிலிருந்து பெருமளவுக்கு வடகிழக்கு மக்கள் ஊரைக் காலி செய்து கொண்டு வெளியேறியதற்கு இந்த வீட்யோக்களும் படங்களும் காரணம் என்று உள்துறை அமைச்சகம் கருதியதால் இதனைப் பரப்பியதாக கருதப்படும் 250 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: