கடந்த 2 நாட்களுக்கு முன்பு நவீன்குமாரை தனி அறைக்கு அழைத்து சென்ற பள்ளி தாளாளர் ராஜா, அவரது மகன் ஆனந்த்(22) ஆகிய இருவரும் ‘ ஹோம் ஓர்க் எழுத வக்கில்லை. பிரண்ட்டுக்கு வக்காலத்து வாங்க வருகிறாயோ எனக் கூறி பிரம்பால் விளாசியதாக தெரிகிறது.
இதில் கை, கால், முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த மாணவன் நவீன்குமார் 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தங்கவேல் விசாரிக்கவே, தாளாளர் மற்றும் அவரது மகன் தாக்கியது பற்றி கூறி உள்ளார். இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனையில் நவீன்குமார் சேர்க்கப்பட்டார். தங்கவேல் அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தல், பிரம்பால் அடித்தல், கொலை மிரட்டல் உள்ளிட் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பள்ளி தாளாளர் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக