அசாமில் ஏற்பட்ட
கலவரத்தை தொடர்ந்து டுவிட்டர் உள்ளிட்ட பல சமூக இணையதளங்களில்
இஸ்லாமியர்களை தூண்டிவிடும் வகையில் போலியாக சித்தரிக்கப்பட்ட அவதூறு
படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது.
மேலும் வடகிழக்கு மாநில மக்களை
அச்சுறுத்தும் வகையிலும் பல்வேறு அவதூறுகள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக
இணையதளங்களில் வெளியானது.
இதனால் பிற மாநிலங்களில் வசித்த வடகிழக்கு மாநி லத்தவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு ரெயிலில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன்படி பல்வேறு இணையதளங்களில் வெளியான 300-க்கும் மேற்பட்ட போலி தகவல் பக்கங்கள் முடக்கப் பட்டன. ஆனால் டுவிட்டர் இணைய தளம் மட்டும் தனது அவதூறு பக்கங்களை முடக்க மறுத்தது. இதையடுத்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் டுவிட்டர் இணையதள நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கலவரத்தை தூண்டக்கூடிய 6 பக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத் தினார்கள்.
இதையடுத்து டுவிட்டர் இணையதளமானது கலவரத்தை தூண்டும் வகையில் இருந்த 6 பக்கங்கள் உடனடியாக நீக்கம் செய்ய ஒப்புக்கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக