வருமானத்தில் பங்குதர கோரும் தயாரிப்பாளருக்கு பதிலடி
கொடுத்திருக்கிறார் தமன்னா. ஸ்ரீதேவி, ஜிதேந்திரா நடித்து 1983ம் ஆண்டு
வெளியான இந்தி படம் ‘ஹ¤ம்மத்வாலா. இப்படம் ரீமேக் ஆகிறது.
சாஜித் கான்
இயக்குகிறார். இப்படம் மூலம் தமன்னா இந்தி படத்தில் அறிமுகமாகிறார் என்று
விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்
சலீம் அக்தர் கூறும்போது, ‘Ôதமன்னாவை 8 வருடங்களுக்கு முன்பு ‘சாந்த் சா
ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் அறிமுகப்படுத்தினேன். அப்போது போட்ட
ஒப்பந்தத்தில் 5 வருடத்துக்கு தமன்னா தனது வருமானத்தில் எனக்கு 25 சதவீதம்
பங்கு தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதன்படி அவர்
நடக்கவில்லை. மேலும் அறிமுகமான படத்தை மறைத்து ‘ஹிம்மத்வாலாÕவில் அறிமுகமாவதாக பொய் சொல்கிறார். இதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளேன் என்றார். இதற்கு தமன்னா சார்பில் அவரது அப்பா சந்தோஷ் பாட்டியா பதில¢ கூறியுள்ளார். அவர் கூறும்போது, சலீம் சொல்வது முற்றிலும் மோசடியானது. சினிமாவில் அறிமுகமாக தமன்னாவுக்கு இவர் வாய்ப்பு அளித்தது உண்மைதான். ஆனால் அதை பயன்படுத்தி தமன்னாவின் வருமானத்தில் இப்போது பங்குபோட முயல்கிறார். 13 வயதாக இருக்கும்போது அக்தர் படத்தில் தமன்னா நடித்தார். அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல் என்னிடம் உள்ளது. அதில் தமன்னா வருமானத்தில் பங்கு தர வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. ஹிம்மத்வாலா தான் தமன்னாவின் அறிமுக படம் என்று நாங்கள் சொல்லவில்லை என்றார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக