பாகிஸ்தானில் 11 வயது சிறுமி குரான் பக்கங்களை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரியே இதில் நேரடியாக தலையிட்டு, உடனடி விசாரணை செய்து அறிக்கை தருமாறு உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காரணம், இந்த விவகாரம் பாகிஸ்தானுக்குள் ஏற்படுத்திய பரபரப்பை விட, பாகிஸ்தானுக்கு வெளியே அதிக பப்ளிவிட்டி கொடுக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சிறுமி, கிருத்துவ மதத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இஸ்லாமபாத்தில் உள்ள இந்த சிறுமியின் வீட்டுக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் கூடிய பொதுமக்கள், கொதிப்புடன் சிறுமியை தாக்க முயன்றதாகவும், தாம் சென்று காப்பாற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்ததாகவும் கூறுகிறது போலீஸ். அயலவர்கள், எரியும் காகிதங்களை பார்த்தபோது…இந்த சிறுமி, தனது வீட்டுக்கு முன் பழைய பொருட்கள், மற்றும் காகிதங்களை போட்டு எரித்துள்ளார்.
அப்போது வீதி வழியே சென்ற சிலர், எரியும் காகிதங்களில் குரானின் பக்கங்கள் இருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளனர்.
அதையடுத்து அயலவர்கள் அங்கே கூடிவிட்டனர். அவர்கள் கொதிப்புடன் சிறுமியை தாக்க முயன்றபோது, போலீஸ் வந்து சிறுமியை அழைத்துச் சென்றது.
பாகிஸ்தானிய மதச் சட்டப்படி குரானை எரிப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம். அதனால், இந்த சிறுமியை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக போலீஸ் தெரிவித்திருந்தது.
குறிப்பிட்ட பெண்ணின் வயது பற்றியும் முரண்பாடான தகவல்கள் உள்ளன. ஒரு போலீஸ் அதிகாரி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் 16 வயது பெண் என்று அல்-ஜசீராவுக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் வேறு சில அதிகாரிகள் 11 அல்லது 12 வயது இருக்கலாம் என்றனர்.
இந்தப் பெண், குரானின் பக்கங்கள் என்று தெரிந்துதான் எரித்தாரா? அல்லது வீட்டுக்கு முன் எரிக்கப்பட்ட காகிதங்களின் குரானின் பக்கங்கள் கலந்திருந்ததை அவர் காணவில்லையா என்பது குறித்து சரியான தகவல்கள் ஏதுமில்லை.
“இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெறும்” என்பதுடன் நிறுத்திக் கொண்டார் போலீஸ் பேச்சாள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக