திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அதிமுகாவுக்கும் கல் குவாரிகளுக்கும் இடையில் என்னதான் பிரச்னை?

கிரானைட் விவகாரத்தில் வசமாக சிக்கிக்கொண்ட பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் பழனிச் சாமி, முன்ஜாமீன் பெற தீவிரமாகப் போராடி வருகிறார்.
மதுரை உயர்நீதி மன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கினாலும் அவர் மீது வெவ்வேறு வழக்கு களைப் பதிவு செய்து கைது செய்தே ஆகவேண்டும் என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாகச் சொல் கிறார்கள். பி.ஆர்.பி.யைக் கைது செய்து, அவரிடம் மத்திய அமைச்சர் அழகிரி, அவர் மகன் தயாநிதி போன்ற வர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெற்று அவர்களையும் கைது நெருக்கடிக்குள் கொண்டுவரவேண்டும் என்பது தான் மேலிட உத்தரவின் சாராம்சமாம்.
 மேடத்தின் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் மாவட்ட எஸ்.பி.அலுவலகமும் இரவு பகல் பாராமல் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பி.ஆர்.பி.யைக் குறிவைத்து அரசு எந்திரமே ஜரூராக இயங்கிவருகிறது என்றால் பி.ஆர்.பி.யார்? அவரது பின்னணி என்ன? அவரது செல்வாக்கு கிடுகிடுவென வளர்ந்தது எப்படி? என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தோம். கிடைத்த தகவல்கள் அத்தனையும் "அடேங்கப்பா!' ரகம்.

பி.ஆர்.பி.யின் நண்பர்கள் தரப்பிடம் பேசியபோது ""பழனிச்சாமி தேனி மாவட்டம் பிராதுகாரன்பட்டி யில் பிறந்தவர். ரெம்ப ஏழ்மையான குடும்பம். அவரோட அப்பா பிள்ளைத்தேவர் கட்டிட மேஸ்த்திரி. தேனியின் பிரபல எஸ்.பி.எஸ்.காண்ட் ராக்ட் நிறுவனத்தை நடத்திவந்த எஸ்.பி.சுப்பையாத் தேவர்தான் பிள்ளைத்தேவருக்கு தொடர்ந்து வேலை கொடுத்துவந்தார். பிள்ளைத் தேவருக்கு தன் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் அளவிற்கு வசதியில்லை. இதனால் பழனிச்சாமியும் தன் அப்பாவோடு இளம்வயதில் கட்டிட வேலைகளுக்குப் போய்க்கொண்டி ருந்தார். அப்ப தொழில் டெக்னிக்குகளைக் கற்றுக்கொண்ட பழனிச்சாமி தன்னோட இளமைக்கால நண்பர்களான பெருமாள், ராமர் ஆகியோரோடு சேர்ந்து இந்த மூன்று பேரின் முதல் எழுத்தையும் சேர்த்து ’பி.ஆர்.பி.’ நிறுவனம் என்று தொடங்கி அம்மன் கோயில்பட்டியில் சின்னச்சின்ன காண்ட் ராக்ட் வேலைகளைச் செய்துவந்தார். அப்ப கிரானைட் பிஸ்னஸின் மீது அவரது பார்வை திரும்ப, நண்பர்களோடு கிரானைட் பிஸ்னஸில் இறங்கத் தீர்மானித்தார். நண்பர்களோ தங்கள் பார்ட்னர் ஷிப் தொகையைப் போட, பழனிச்சாமியோ தன் பங்காக போட, தன் அக்கா பின்னியம்மாளிடம் உதவி கேட்டார். அவர் தன் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க நகையைக் கழற்றிக்கொடுக்க, அதைப் பணமாக்கிய பழனிச்சாமி பி.ஆர்.பி. கிரானைட் ஸுக்காக 90-வாக்கில் 10 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதில் எடுத்த எடுப்பிலேயே அதிக லாபம் கிடைத்ததைக் கண்டு மலைத்துப்போன பழனிச்சாமி, தன் பார்ட்னர்களான பெருமாளையும் ராமரையும் 91, 92-வாக்கில் கழற்றி விட்டுவிட்டார்'' என்கிறது நட்பு வட்டாரம்.

தன் பார்ட்னர்களை திடீரென கழற்றிவிடும் தைரியம் பழனிச்சாமிக்கு எப்படி உண்டானது? என அவர்களிடமே கேட்டபோது ""எல்லாம் அரசியல் நட்புகள் கொடுத்த தைரியம்தான். எப்படின்னா? 91-ல் ஜெ.’ ஆட்சிக்காலம் தொடங்கியபோது காண்ட்ராக்ட் பிஸ்னஸ் தொடர்பாக அப்போதைய மந்திரி கண்ணப்பனை சந்தித்தார். அவர் பவர்ஃபுல்லாக இருந்ததால் அவரோடு நெருக்கம் பாராட்டி ஒட்டிக்கொண்டார். அவர் மூலம் சின்ன மேடத்தின் நட்பும் அவருக்குக் கிடைக்க, தனது கிரானைட் பிஸ்னஸில் முதலீடாகப் போட பெரிய அளவில் பணம் புரட்ட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது. அந்த தைரியத்தால்தான் தன் நண்பர்களான பெருமாளையும் ராமரையும் கழற்றிவிட் டார். அவர் நினைத்த மாதிரியே மேலிட நட்புமூலம் அவருக் குக் கோடிக்கணக்கில் கடன் கிடைக்க, தன் பிஸ்னஸை கிடுகிடுவென விரிவாக்கத் தொடங்கினார். அ.தி.மு.க. ஆண்ட 91-96 காலத்தில் விசுவரூபமெடுத்துவிட்டார் பழனிச்சாமி. அடுத்து 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும் பழனிச்சாமி கொடிகட்டிப் பறந்தார். ஏறத்தாழ 40 நாடுகளில் கிளை அலுவலகத்தைத் திறந்து சர்வதேச லெவலில் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்து தொழில் நடத்த ஆரம்பித்தார். இந்த பீரியடில் தனது மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான ஓ.பி.எஸ்.சின் நட்பை தேடிப்பெற்றார். அவரோடு நெருக்கமாக இருந்து தன் செல்வாக்கை மேலும் பலமடங்கு உயர்த்திக்கொண்டார் பழனிச்சாமி. அந்த காலகட்டத்தில் ஓ.பி.எஸ்.சே பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஒரு பார்ட்னராக செயல்பட்டார் என பரபர டாக் அடிப்பட்டதும் உண்டு'' என்றெல்லாம் மலைக்க வைத்தார்கள்.

பி.ஆர்.பி. நிறுவனத்தின் குடும்ப ஆதிக்கம் குறித்து அறிய, அவரது உறவினர்கள் சிலரை சந்தித்தோம். அவர்கள் நம்மிடம், ""பழனிச்சாமி அப்பா பிள்ளைத்தேவருக்கு பழனிச்சாமி மட்டும்தான் ஆண் பிள்ளை. பின்னம்மாள் உட்பட ரெண்டு பெண்பிள்ளைகளும் அவருக்கு இருக்காங்க. இவர்களில் மூத்த சகோதரியான பின்னம் மாள்தான் பி.ஆர்.பி. நிறுவனம் வளர பொருளாதார ரீதியில் பலமா இருந்தாங்க. 90 வரை தேனியில் குடியிருந்த பழனிச் சாமி, கிரானைட் குவாரி பிஸ்னசுக்காகத் தான் மதுரைக்கு வந்து செட்டிலானார். நண்பர்களை கழற்றிவிட்டதும் பழனிச்சாமியே பி.ஆர்.பி. ஓனர் பழனிச்சாமி ஆகிவிட்டார். பழனிச் சாமியின் முதல் மனைவிக்கு செந்தில்குமார், சுரேஷ்குமார்ன்னு ரெண்டு மகன்கள். முதல் மனைவி இறந்து போக, இரண்டாவது தாரத்துக்குத் தாலிகட்டினார். அவர் மூலம்தான் பழனிச்சாமிக்கு சிவரஞ்சனிங்கிற மகள். பி.ஆர். பி.யின் அக்காள் பின்னம்மாளின் மகன் அழகேச னுக்கு மகராசன் என்கிற மகனும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். அழகேசனின் மகனுக்கு பெண் கொடுத்த பி.ஆர்.பி., அவரது 2 மகள்களையும் தன் மகன் களுக்குக் கட்டி வைத்துவிட்டார். இப்படி குடும்ப உறவான இவர்களைத்தான் தனது பார்ட்னர்களாகவும் பினாமிகளாகவும் பழனிச்சாமி வைத்திருக்கிறார்’ என்றார்கள் விபரமாகவே.

அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் ஆளும்கட்சிப் புள்ளிகளின் நெருக்கத்தால் கிடுகிடுவென வளர்ந்த பி.ஆர்.பி. மீது இப்போதைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத் திலேயே நெருக்கடி கள் ஏற்பட்டது ஏன்? என மது ரை அரசியல் புள்ளிகளிடம் நாம் விசாரித்த போது.. ‘""இது பி.ஆர்.பி.யே எதிர்பார்க்காத திருப்பம். போன தி.மு.க. பீரியடின்போது பி.ஆர்.பி. கிரானைட் கொள்ளை குறித்து தினபூமி ஆசிரியர் மணிமாறன் புகார் கிளப்பி பரபரப்பூட்டினார். அப்போது இந்த விவகாரத்தில் தப்பிக்க அவர் பொட்டு மூலம் அழகிரி தரப்பை அணுகினார்.

இதற்கு கைமாறாக அழகிரி மகன் துரை தயாநிதிக்காக ஒலிம்பஸ் என்ற கிரானைட் நிறுவனத் தைத் தொடங்கிக் கொடுத்து, அவருக்கு சம்பாத்தியத் தையும் ஏற்படுத்திக் கொடுத்தார் பி.ஆர்.பி. இந்த விபரமெல்லாம் தேர்தலுக்கு முன்பாகவே ஜெ.’ கவனத்துக்குப் போக, மதுரை பிரச்சாரத்திற்கு வந்த ஜெ.’ பகிரங்கமாகவே, "நான் ஆட்சிக்கு வந்தால் மதுரை குவாரி கொள்ளையர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பேன்' என்று சூளுரை செய்தார். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு, சகாயம் அறிக்கை யின் சாக்கில் இப் போது வெளிப் பட்டுக் கொண்டி ருக்கிறது'' என் கிறார்கள்.

"இது உண் மையா?' என இலைத் தரப்பு வி.ஐ.பி.க்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது ""உண்மைதான். கலெக்டர் சகாயத்துடன் பி.ஆர்.பி. முறைத்துக்கொண்ட பின்னரும் கூட ஓ.பி.எஸ். அந்த பி.ஆர்.பி.க்கு சப்போர்ட்டாகவே இருந்தார். சகாயம் டிரான்ஸ்பர் விவகாரத் துக்கும் அவர் உதவினார். அதோடு ஓ.பி.எஸ்.சும் நத்தம் விசுவநாதனும் 10 நாட்களுக்கு முன், மேலிடத்திடம் சென்று பி.ஆர்.பி. பெரிய இலக்கத் தொகையைக் கொடுத்து வெள்ளைக்கொடி பிடிக்கிறார் என்று காம்ப்ரமைஸ் பேச, மேலிடமோ, "இதில் உங்கள் பங்கு என்ன என்பதும் தெரியும். அந்த தொகையை கட்சி நிதியில் சேர்த்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கறாராக சொல்லி விட்டது.

எங்களுக்குத் தெரிந்து பி.ஆர்.பி. தற்போது ஜாமீன் வாங்கினால் கூட குவாரியில் அனுமதியில்லாமல் வெடிமருந்து பயன் படுத்தினார் என்பது போன்ற வழக்கிலாவது எப்படியும் கைது செய்யப்படுவார். அத்துடன், குவாரிகளிலேயே பலரைக் கொலை செய்துள்ளார் என்று வழக்குப் போடுவதற்கும் ஸ்பெஷல் டீம் களமிறங்கி யுள்ளது. அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்தின்படி அழகிரி தரப்பு வளைக்கப்படும். அதோடு மாஜி பொன் முடியின் குவாரியையும் பி.ஆர்.பி. பராமரிப்பதாகவும் மேலே தகவல் போயிருக்கிறது. எனவே அவரும் மேலும் தி.மு.க. பெரும்புள்ளிகள் சில ரும் இந்த விவகாரத்தில் சேர்க் கப்பட்டு சிக்கலை சந்தித்தே தீருவார்கள்'' என்றார்கள் உறுதியான குரலில்.

பி.ஆர்.பி. நிறுவனம் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் கேட்டபோது... ""முதல்வரின் நேரடி உத்தரவுப்படி நேர்மையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது''’என முடித்துக்கொண்டார்.

விவகாரம் அழகிரி தரப்பை நோக்கி நகர்வதால் பரபரப்பு கூடுதலாக இருக்கிறது.

-முகில்

எண் ராசி!

பி.ஆர்.பி. ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் தீவிர நம்பிக்கை உடையவர் என்பதால் அவரது ஆஸ்தான ஜோதிடத் தரப்பை விசாரித்தோம். ""பி.ஆர்.பி.க்கு இப்போ சரியா 56 வயசு ஆகறது. 1956-ல் பிறந்தவர் பழனிச்சாமி. நியூமராலஜியிலும் தீவிர நம்பிக்கையுள்ள பி.ஆர்.பி. தான் பிறந்த ஆண்டான 1956-ஐயும் தனது வயதையும் குறிக்கும் வகையில் 5656 என்ற எண்ணிலேயே தன்னிடமிருக் கும் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பெரும் பாலான வாகனங்களை ஓடவிட்டிருக்கிறார். அவர் நம்பிய 56 அவரது 56-வது வயதில் அவரைக் கை விட்டதுதான் பெரும்சோகம். இதற்கு அவர் பரி காரங்கள் செய்தால் சிக்கலில் இருந்து விலகலாம்''‘என்றது கூலாகவே.

thanks nakkeran + kamraj,Madhurai

கருத்துகள் இல்லை: