புதன், 22 ஆகஸ்ட், 2012

நயன்தாரா :சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்

சென்னையில் சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்ய
வேண்டும்:  நடிகை நயன்தாரா
 
 நடிகை நயன்தாராவுக்கு சென்னை ரோடு ஏழு வருட பரிச்சயம். இந்நிலையில் அவர்,  சென்னை நகரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர்,   ‘’சென்னையில் நான் நிறைய நேரங்களை செலவிட்டு உள்ளேன். இங்குள்ள பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் சில குறைகளும் உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை.
பொதுமக்கள் நடந்து செல்லவும், வண்டிகளை ஓட்டிச் செல்லவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் ரோடுகள் மிகவும் மோசமாகி விடுகிறது.
ரோடுகளை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்தால் ரோடுகளில் தண்ணீர் நிற்காது.
இந்த குறைகளை தவிர சென்னையை விரும்புவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் சென்னையை சுத்தமான, பசுமையான நகரமாக பார்க்க நான் ஆசைப்படுகிறேன்’’என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: