டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 68வது பிறந்த நாளையொட்டி
இன்று அவருக்கு நாடு முழுவதும் காங்கிரஸார் மலரஞ்சலி செலுத்தினர்.
இன்று 68வது பிறந்த நாளாகும். இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது சமாதியில்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், ராஜீவின் மனைவி
சோனியா காந்தி, மகள் பிரியங்கா வத்ரா, அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர்
மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான காங்கிரஸாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதேபோல பல்வேறு தலைவர்களும் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திலும் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக