வினவு
அ.தி.மு.க எனும் இயக்கத்தின் உண்மையான தொண்டன் என்று
நிரூபிப்பதற்கு தனது மார்பைப் பிளந்து அம்மாவிடமும், தொண்டர்களிடமும்
காட்டுவேன் என்று பொங்கியிருக்கிறார் செங்கோட்டையன்
ஜெயாவின் 91-96ஆம் ஆண்டு ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் பெரும் கோடிகளைச் சுருட்டிய செங்கோட்டையன் தற்போதைய மூன்றாவது ஆட்சியில் அமைச்சராக இருந்து சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ’அம்மா’ யாரை நீக்குவார், சேர்ப்பார் என்பது அவரது அடிமைகளுக்கே இன்னும், இனியும் பிடிபடாத விசயம்.
செங்கோட்டையன் விசயத்தில் அவரது சின்ன வீடும், அந்தச் சின்ன வீட்டின் சொத்துச் சேர்ப்பும் ஜெ வை ஆத்திரமூட்டி நீக்கச் செய்திருப்பதாக எல்லா ஊடகங்களும் பகிரங்கமாகவே எழுதுகின்றன.
பதவி நீக்கத்திற்குப் பின் கோபிச்செட்டிபாளையம் கம்பன் விழாவில் செங்கோட்டையன் பேசும்போது சீதையிடம் தான் இராமனது ஆள் என்று நிரூபிக்க அனுமான் மார்பைப் பிளந்து காட்டியது போல அ.தி.மு.க எனும் இயக்கத்தின் உண்மையான தொண்டன் என்று நிரூபிப்பதற்கு தனது மார்பைப் பிளந்து அம்மாவிடமும், தொண்டர்களிடமும் காட்டுவேன் என்று பொங்கியிருக்கிறார். ஜெயா நடந்து செல்லும் தெருவையே சாஷ்டாங்க நமஸ்காரத்தின் மூலம் அங்கப் பிரதட்சணம் செய்வதிலேயே மார்பு மட்டுமல்லாமல் சகல உறுப்புகளிலும் அம்மா குந்தியிருக்கிறார் எனும்போது, தேவையில்லாமல் இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரி ரிஸ்க்கை ஏன் எடுக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக