திங்கள், 1 நவம்பர், 2010

சீதாவாக நயன் - மாற்றமில்லை



       தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா 'ராமாயணம்' படத்தில் ராமராக நடிக்க இருக்கிறார். இது பக்தி கலந்த கமர்ஷியல் படமாக இருக்குமாம். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப் பட்டிருக்கிறது.
 

சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'சிம்மா' படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. மீண்டும் பாலகிருஷ்ணா நடிக்கும் 'ராமாயணம்' படத்தில் நயன்தாரா ஜோடி சேர்கிறார் என செய்திகள் பரவின. இதற்கு தெலுங்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதற்கு காரணம் பிரபு தேவாதான். இன்னொருவருடைய கணவருடன் ஊர் சுற்றும் நயன்தாராவை எப்படி 'சீதா'வாக பார்ப்பது என்று எதிர்ப்புகள் தொடர்ந்தபடி இருந்தன. 

அதனால் இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பார் எனவும் பேசப்பட்டது. ஆனால் இப்போது நயன்தாரா தான் சீதையாக நடிக்கப் போகிறாராம். நயன் சீதாவாக நடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெலுங்கு திரைவட்டாரத்தில் சொல்லிக் கொள்கிறார்கள்.
தற்போது சேலை விளம்பரங்களில் பிசியாக இருந்து வருகிறார் நயன். அடுத்து 'ராமாயணம்'தான். சில மாதங்கள் முன்பு ஆந்திராவில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் பிரபு தேவா நயன்தாராவிற்கு 'பெஸ்ட் க்ளோசப் ஜோடி' விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் ஒரு விளம்பரம் தான்!

கருத்துகள் இல்லை: