புதன், 3 நவம்பர், 2010

என்னைப் போல மேலும் பல பெண்களை சீரழித்துள்ளார் பாதிரியார் ராஜரத்தினம்-கன்னியாஸ்திரி தகவல்

திருச்சி: என்னைப் போல மேலும் பல பெண்களை கற்பழித்து சீரழித்துள்ளார் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வரான பாதிரியார் ராஜரத்தினம் என்று அவரால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கூறியுள்ளார்.

சமீபத்தில் பாதிரியார் ராஜரத்தினம் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் பிளாரன்ஸ் மேரி. இவர் புனித அன்னாள் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்தவர்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை மகளிர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து ராஜரத்தினம் தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

நேற்று இந்த மனுமீதான விசாரணை நடந்தது. அப்போது தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி பிளாரன்ஸ் மேரி கோரிக்கை விடுத்துமனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, பிளாரன்ஸ் மேரிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மேரி பேசுகையில்,

என்னை மட்டும் கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால் பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும எடுக்கவில்லை. அவர் மேலும் பல கன்னியாஸ்திரிகளை கற்பழித்துள்ளார். ஆனால் அவர்கள் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்.

வழக்கை வாபஸ் பெறும்படி எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. அதற்கு நான் அரசமாட்டேன். நான் தைரியமானவள். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்றார்.
பதிவு செய்தவர்: BALAKUMAR
பதிவு செய்தது: 03 Nov 2010 7:43 pm
IT IS SHOCKING TO SEE A REV.FATHER WHO IS WORSHIPFUL BEHAVED LIKE THIS WILL SPOIL THE PURITY OF FAITH

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 03 Nov 2010 7:38 pm
christianterrorist

கருத்துகள் இல்லை: