புதன், 3 நவம்பர், 2010

யாழ். மக்கள் அம்பாந்தோட்டை நோக்கி நடைப்பயணம்


ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டைக்கான நடைப்பயணம் நேற்றுக்காலை யாழ்ப்பாணம் ஸ்ரீநாகவிகாரை முன்பாக பெளத்த இந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமாகியது. பாதயாத்திரைக்கு முன்பாக அழகிய முத்துப்பல்லாக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் ஜனாதிபதியின் உருவப் படம் சகல இன மக்களுக்கும் வணக்கம் கூறுவதாக கட்டப்பட்டிருந்தது. இரண்டாவது வாகனத்தில் மத நல்லிணக்கத்தை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. மற்றுமொரு வாகனமும் அலங்கார ஊர்தியாக நடைபவனியில் சென்றது.
இந்த நடைப்பயணத்தில் தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ் இளைஞர்கள், சிங்கள மக்கள், பெளத்ததுறவிகளும் பங்கு கொண்டு சென்றனர்.
ஆரம்ப வைபவத்தில் யாழ்ப்பாணம் சிறி நாகவிகாரை சர்வதேச பெளத்த நிலைய வளாகத்துக்குரிய தேரர் கருத்துரைக்கையில், நாட்டின் தலைவருக்கு நாம் செய்யும் கைமாறாகஇப்பயணம் யாழ். மக்கள் நடைப்பயணம் நடை பெறுகின்றது. சகல இனங்களும் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் பயமின்றியும் மகிழ்ச்சியாக வாழ வழிவகுத்தவர் எமது ஜனாதிபதி என்றார்.
யாழ். மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரமுகர்கள் எஸ். தங்கராஜா, என். யோகராஜன் ஆகியோரும் மக்களும், நடைப்பயணம் சென்றவர்களை வழியனுப்பிவைத்தனர். நடைப்பயணக் குழுவினர் யாழ். மக்களின் செய்தியை 19 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதியிடம் கையளிப்பர்.

கருத்துகள் இல்லை: