. |
. |
30 லட்ச ரூபா பெறுமதியான பீடி வகைகளை சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்குள் கடத்துவதற்கு முற்பட்ட இந்தியர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். |
பீடி வகைகளுடன் நான்கு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிலாவத்துறை கடற்பகுதியில் இந்த மீன்பிடிப் படகினை கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த படகில் சுமார் 750,000 பீடிகள் காணப்பட்டதாகவும், இடத்தை அறிந்து கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஜீ.எஸ்.பி கருவியொன்று, கையடயக்கத் தொலைபேசி ஒன்று ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன. பீடிகளை பாதுகாப்பாக கடத்தும் நோக்கில் பொலித்தீன் பைகளினால் பொதி செய்து இலங்கைக்கு கடத்த முற்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். |
சனி, 6 நவம்பர், 2010
30 லட்ச ரூபா பெறுமதியான பீடி வகைகளை இலங்கைக்குள் கடத்த முற்பட்ட இந்தியர்கள் கைது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக