போர்க் குற்றங்கள் காரணமாக இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவா கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் எம்.வீ.சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 491 இலங்கையர்களில் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்கூவரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்நபர் மீதான யுத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்.கனேடிய குடிவரவு சட்டங்களின்படி போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்ட எவரும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ் விவகாரத்தைக் கையாளும் கனேடிய எல்லை சேவை முகவரகம் இது தொடர்பாக தகவல் எதனையும் கூற மறுத்துள்ளது.
எனினும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்ப அமைச்சர் விக் டோவ்ஸின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில் இவ்விடயத்தில் நான் சொல்ல முடிந்தது என்னவென்றால் கனடாவானது கிரிமினல் செயற்பாட்டாளர்களின் இலக்காக இருக்கும்போது நாம் வெறுமனவே அமர்ந்திருக்கமாட்டோம் என்பதுதான் என்றார்.
கனேடிய அகதிகள் சபையில் சுமார் 80,000 அகதிகளின் விவகாரங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கனேடிய சட்டமா அதிபர் 63.000 அகதிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 41,000பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக