"உன்னாலே உன்னாலே", "ஜெயம் கொண்டான்", "மோதி விளையாடு" உள்ளிட்ட படங்களில் நடித்தும் ஹீரோ வினய்க்கு பெரிய அளவில் புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் காரணம் வினய் கேட்டு வந்த அதிகப் படியான சம்பளம் தான். இதன் விளைவு தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிட்டவில்லை...என்பதை உணர்ந்த வினய், அதிரடியாக சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, "சாக்லெட்" பட அதிபரும், "மதுர" பட இயக்குநருமான மாதேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சம்பளத்தை குறைத்துள்ளதால் தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் வாயிற் கதவை தட்டும் என நம்புகிறார் வினய் ! இப்பொழுதாவது புத்தி வந்ததே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக