செவ்வாய், 2 நவம்பர், 2010

கிண்ணியா கண்டல் காட்டில் மீள்குடியேறிய மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்; குடிசைகள் தீக்கிரை


கிண்ணியா கண்டல் காடு பகுதியில் மீள்குடியேறிய மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதுடன், அவர்களது குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன.அவர்கள் நட்டிருந்த பயிர்களும் பிடுங்கி வீசப்பட்டுள்ளன.சீருடை அணிந்திருந்த பொலிஸாரே இவற்றைச் செய்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த இம்மக்களின் பெயர்கள் 1990 க்கு முந்திய வாக்காளர் பட்டியல்களில் உள்ளன. அரசாங்கத்தின் மீள்குடியேற்றக் கொள்கைக்கமைய இவர்கள் மீள்குடியேற்றப்பட்டனர். கடந்த புதன்கிழமை மாலை அப்பகுதிக்கு விஜயம் செய்த கிண்ணியா உதவிப்பிரதேச செயலாளர் சீ.கிருஷ்ணேந்திரன்,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பார்வையிட்டனர். மறுநாள் வியாழக்கிழமை கிண்ணியா பொலிஸாருக்கு இந்த மீள்குடியேற்றத்தோடு தொடர்பான பல ஆவணங்கள் பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றுக் காலை இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.தமது குடிசைகள் எரிக்கப்பட்டமை குறித்தும் தாங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது குறித்தும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தகவல் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: