சிங்கப்பூருக்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை உடலுக்குள் மறைத்து கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என சற்று முன்னர் எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணியளவிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நாணயத்தாள்களின் பெறுமதி சுமார் 50 லட்சம் என தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட நபர் 45 வயதான இந்தியப் பிரஜை ஆவார். இவர் உடலின் வயிற்றுப்பகுதி மற்றும் கால்களில் நாணயத் தாள்களைக் கட்டிக்கொண்டு கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக