by salasalappu i
அண்மைக்காலமாக யாழ் பேராசிரியர்கள் ,புத்தி ஜீவிகள் மட்டத்தில் பேசப்படும் விடயமாக மாறிப் போயிருக்கும் இச் சமாச்சாரம் பற்றி அறிந்தவற்றையும், பேசப்பட்ட கருத்துக்களையும்
கொண்டு களமமைத்து கருத்தறிதலுக்கான ஒர் சிறிய ஆய்வே இது.
யார் இந்த டக்ளஸ் தேவா? டாக்டர் பட்டம் இவருக்கு பொருத்தமா? இவருடைய வாழ்க்கை வரலாற்றை இன்னுமொரு பேனா எழுத இடம் கொடுத்து விட்டு, ஆயுதப்போராட்ட காலத்தில் ஆயுதங்களுடன் அலைந்த பல போராட்ட தலைவர்கள் தங்கள் கைகளை கறைபடித்திய வரலாற்றினுள் தன்னை புதைத்துக் கொள்ளாமல் கற்பக விருட்சம்போல் இன்றும் கால ஓட்டத்தில் கம்பீரமாக மக்கள் பணியாற்றும் இம் மனிதனின் வாழ்வை சற்று புரட்டிப்பார்ப்பது பொருத்தமானதே.ஆம் உங்கள் சிந்தனைகள் சிதைந்து யாரோ டக்ளஸின் ஆதரவாலன்
எழுதும் ஆய்வாக இதைப் பார்க்காதீர்கள்.
ஒரு நல்ல தலைவனின் தகைமைகளை,வரலாற்றை வாழும் பொழுது
ஆய்வு செய்யும் ஓர் சிறிய ஆய்வாகப் பாருங்கள்.
1.விடுதலை இயக்கமான EPRLF அமைப்பின் இராணுவ
தளபதியாக இருந்த பொழுது உற்கட்சிக்குள் ஏற்படுத்ப்பட்ட
முரண்பாடுகளை இரத்தக் கறை படியாது சுமுகமாக தீர்த்து வெளியேறி இன்றைய E.P.D.P என்னும் மக்கள் அமைப்பை நிறுவியமை.
2.இந்திய இராணும் இலங்கையில் கால்பதித்தது முதல் வெளியேறிய காலம் வரை தன்னுடைய எந்த செயல்ப்பாடுகளையும் இலங்கைத் தீவில் நிகழ்த்தாமல் இந்திய மண்ணில் வாழ்ந்தமை.
3.தீவகப்பகுதி படையினரால் மீட்கப்பட்டு, புலிகள் கேந்திர முக்கியத்துவமற்ற பகுதியென பிரகடனப்படுத்தி விட்டு வெளியேறிய பொழுது தோழர்களுடன் தானும் ஒரு தோழனாக தொண்டனாக மூடைகள் தூக்கி மக்கள் பசி போக்கிய மகத்தான வரலாற்றை
பதிவு செய்து கொண்ட உன்னத தலைவன்.
4.புலிகளின் பாசிசம் கோலொட்சிய காலங்களில் சுட்டுகொல்லப்பட்ட மக்கள் பணி செய்த போராளிகளின் குடும்பத்தினரை கொழும்பில் அமைந்துள்ள E.P.D.P தலைமைப் பணிமனையில் தங்கவைத்ததோடு உணவு, உடை, உறையுள் மாத்திரமின்றி மகத்தான கல்வியை அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வழங்கிய வள்ளல்.
(சான்று அன்மையில் செய்தித்தாள்களில் இடம் பிடித்த E.P.D.P தலைமைப் பணிமனையின் தண்ணீர் செலவு ஆம் தனி மனிதனுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு தண்ணீர் தேவையா?
அக்காலப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட E.P.D.P உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தன்னை மாற்று கருத்துக்களின் தளமாகக் காட்டிக் கொண்டு ஐரோப்பிய மண்ணில் செய்தி தரும் இணையம் அப் போராளிகளின் இழப்பைக் கூட பொருட்படுத்தாமல் தூதரங்களை நோக்கி E.P.D.P தோழர்கள் அணிவகுப்பதாக கேலி சித்திரம் வரைந்தமை.)
5.பதினொரு தடவைகள் புலிகளின் (தற்கொலை) தாக்குதலுக்கு முகம் கொடுத்ததுடன் பல தாக்குதல்களை மேற்கொள்ள முயற்ச்சித்தவர்களை மன்னித்து அவர்களுக்கு
விடுதலை வாங்கி கொடுத்தமை.
6.யாழ்ப்பாணம் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட பின்னர் அரசியல் சிக்கல் ஒன்றினை ஏற்படுத்தி,மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளி அரசியல் இலாபமடைய முயற்சித்த புலிகள் மக்களுக்கு உணவு, மருத்துவப் பொருட்கள் கொண்டு
சென்ற கப்பலை தாக்கிய பொழுது உணவு, மருந்துகளை இந்தியாவிலிருந்து கப்பலில் தருவித்து பசியோடு, பிணிகள் தீர்த்த சிரஞ்சீவி இவர்.
7.இயக்க முரண்பாடுகள் காரணமாக வெளியேறும் முக்கிய உறுப்பினர்கள் தலைமையினால் கொலை செய்யப்படும், அல்லது பழிவாங்கப்பட்ட வரலாற்றில் விமர்சனங்கள் தூசிகளைத் துடைக்கும் துடப்பம் போன்றது என்பதை நிருபித்து வெளியேறிய நபர்கள் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கட்சி பணியாற்றும் புதிய
அத்தியாயத்தை பதிவு செய்த மாமனிதன்.
நீண்டு கொண்டே செல்லும் அவர் தம் சேவைகளுள் கல்வி,கலை,கலாச்சாரம் அபிவிருத்தி, மீள்- குடியேற்றம்,விவசாயம்,உயிர் வாழும் உரிமை முதல்,
அடிப்படை உரிமைகள் வரை பெற்றுத்தர ஐ.நா. மன்று முதல் அகிலத்தின் எல்லா மூலை முடுக்கெல்லாம் உரிமைக் குரல் கொடுக்கும் இம் மனிதரை கௌரவிக்க டாக்டர் பட்டமென்ன நோபல் பரிசுக்கு சிபார்சு செய்யும் காலமிது என்றால் மிகையாது.
ஆக்கம்: நயினை அகத்தியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக