புதன், 3 நவம்பர், 2010

இடதுசாரி இயக்கத்தில் இவ்வளவு காலமும் இருந்தது அத்தனையும் நடிப்பா சொல்லு சுரேஸ் அத்தனையும் நடிப்பா?


எப்படி சுரேஸ் உங்களால் இப்படி பேசமுடிகிறது. உங்களுடைய அண்மையை அறிக்கையைப்படித்தவுட் இப்படித்தான் தோன்றியது. தமிழ்மக்கள் சிங்களமக்கள் ஒற்றுமையை வலியுறுத்த முற்போக்கு சிந்தனைகொண்டவர்கள் ஒருபக்கம் போராடிக்கொண்டிருக்கையில் சிங்கள மக்களுக்கு எதிராக இப்படி ஒரு வன்மத்தை கக்க எப்படி சுரேஸ் மனம் வந்தது. இடதுசாரித்தத்துவத்தில் இருந்த வளர்க்கப்பட்ட நீங்கள் புலிகளுடன் கூட்டு சேர்ந்தபோது மனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன். நான் கட்சி சாராதவன் ஆனால் இடதுசாரி முற்போக்கு சிந்தனைகளில் என் சிந்தனைகளைச் செலுத்தி வருபவன். தமிழ்ச்சமூகம் எப்போதும் வலதுசாரிச்சிந்தனைகளில் வலம் வந்தபடி இருக்கிறது. இன்றைய அதன் துன்பங்களுக்கு காரணம் அந்தச்சமூகத்தின் மோசமான இந்த சிந்தனைகளே காரணம். அதை;தான் இதுவரைகாலமும் தமிழ்த்தேசியக்கட்சிகளும் புலிகளும் உருவேற்றி உருவேற்றி தமிழச்சமூகத்தை மோசமான ஒரு சூழலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. இதை உணரவில்லையா சுரேஸ்
எப்போதாவது தனிமையில் இருந்து சிந்திக்கும்போது செய்வதெல்லாம் தவறு என தோணவில்லையா? பத்மநாபாவின் மரணத்தை நினைக்கும்போதெல்லாம் பாசிசத்தின் மீது கோபம் வரவில்லையா?. தமிழ்மக்களின் இன்றைய நிலைக்கு புலிகளும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புமே முக்கிய காரணங்கள் என்பது தங்களுக்குத் தெரியாதா சுரேஸ். சிங்கள மக்கள் எல்லாரையும் விரோதமாக கருதுகிற போக்கு தங்களிடம் எப்போது ஏற்பட்டது சுரேஸ். புலிகளிடம் சென்று சரணாகதியடைந்தபோதே மனதில் இருந்த நல்ல சிந்தனைகளுக்கெல்லாம் விடைகொடுத்துவிட்டீரா சுரேஸ்
எத்தனை அற்புதமான மனிதர்கள் தமிழ்ச்சமூகத்திற்காக தமது உயிரை புலிகளினால் பலவந்தமாக கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் உங்களுடைய மனம் துடிக்கவில்லையா?. நல்ல மனிதர்களை சமூகம் இழக்கும்போது அங்கு ஏற்படுகிற வெற்றிடம் கவலைக்குரியது சுரேஸ். மனசைச் சொட்டு சொல்லும் சுரேஸ்!  இந்த அற்புமான மனிதர்கள் எல்லாம் சிங்கள மக்களாலா கொல்லப்பட்டார்கள். இல்லையே புலிகளால்தானே!
இது தெரிந்தும் இன்றுவரை புலிகள் தொடர்பாக ஏன் பேச மறுக்கிறீர்கள். இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்றா? சிங்கள மக்கள் தொடர்பான உங்கள் விமர்சன உரிமையை நான் மறுக்கவில்லை. ஆனால் அத்தகைய விமர்சனத்தை புலிகள் மீது ஏன் இன்றும் வைக்க மறுக்கிறீர்கள்
யாழ்நூலகத்தில் நடைபெற்ற சம்பவம் பொய்யானது என செய்திகள் வெளிவந்தும் அதனை ஊதிப்பெருப்பிக்கிறீர்களே!.  அன்று செல்லன் கந்தையா தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக புலிகளும் யாழ் உயர்குடியினரும் அவரை நூல் நிலையத்தை திறக்க விட வில்லை. அப்போ எங்குபோனது சுரேஸ் இப்போதுள்ள ஞானம்.
சேராத இடம் சேர்ந்து அறிவு என்கிற கண்ணை மூடி எப்படி இப்படி ஒரு அறிக்கையை விட சிங்கள மக்களுக்கு எதிராக விட மனம் வந்தது சுரேஸ். வேண்டாம் சுரேஸ் இத்துடன் இந்தப்போக்குகளை நிறுத்தி விடுங்கள். இனவிரோதங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு வரலாறு எப்பவும் அவர்களுக்கு ஒரு மோசமான இடத்தைத்தான் தந்திருக்கிறது. அத்தகைய ஒரு இடத்திற்கு செல்ல நீங்களும் ஆசைப்படுகிறீர்களா?
அதனால்தான் கேட்கிறேன் .இதுவரைகாலமும் ஒரு இடதுசாரி அமைப்பில் இருந்தது எல்லாம் நடிப்பா சொல்லுங்க சுரேஸ் நடிப்பா
சிங்கள மக்கள் தாம் எதுவும் செய்யலாம் என நினைக்கின்றனர்
- சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு
யாழ் நூலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் படித்த நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் தான் என்பதை அரசாங்கம் நிரூபித்து விட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் யாழ். நூலகத்துக்குள் நுழைந்த தென்னிலங்கைச் சிங்கள சுற்றுலாப் பயணிகள் அறி வித்தலை மீறி நூலகத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அங்கி ருந்த புத்தக ராக்கைகளை கீழே தள்ளி விட்டுப் புத்தகங்களையும் வீசிய சம்பவம் தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இக் குற்றச்சாட்டைத் தெரிவித் தார். அவர் தெரிவித்ததாவது
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டதன் பின்னர் தென்னிலங் கைச் சிங்கள மக்கள் மத்தியில் புதுவித கருத்தொன்று இன்று தோன் றியுள்ளது. தாங்கள் எங்கும் செல்லலாம் எதனையும் செய்லாம். யாரும் ஏன் எதற்கு என்று கேட்க முடியாது.
தாம் எப்படி நடந்து கொண்டாலும் அதற்கு இலங்கை அரசின் படைத் தரப்பு பாதுகாப்புத் தரவேண்டும் என்ற எண்ணத்திலேயே இவர்கள் உள்ளனர். விரும்பத்தகாத குறிப் பிட்ட சம்பவத்தை ஆராயும் போது கூட இதுவே புலப்படுகிறது.

கருத்துகள் இல்லை: