சனி, 6 நவம்பர், 2010

உலகின் மிக வயதான பெண் காலமானார்.


பாரீஸ்: உலகின் மிக மூத்த நபராக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த  கன்னியாஸ்திரீ நேற்று முன்தினம்  மரணமடைந்தார். அவருக்கு வயது 114. கரிபியன் தீவு அருகே உள்ள செயிண்ட் பர்த்தலேமியைச்  சேர்ந்தவர் யூஜின் பிளான்சர்ட். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான இவர், கடந்த 1896 ம் ஆண்டு, பிப்ரவரி 16 ம் தேதி பிறந்தார். இவர், பல வருடங்களாக டச்சுத் தீவுகள் அருகே உள்ள கொராக்கோவில் வசித்தார். கடந்த 30 ஆண்டுகளாக, செயிண்ட் பார்த்தலேமியில் உள்ள மருத்துவமனையில் சேவை செய்து வந்தார். அமெரிக்காவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட  உலகின் மூத்த நபர் குறித்த ஆய்வில், யூஜின்  உலகின் மிக மூத்த நபர் என்று தெரியவந்தது. இது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்நிலையில், யூஜின் நேற்று முன்தினம் உயிரிழந்தார். முன்னதாக, உலகின் மிக மூத்த நபராக இருந்த  ஜப்பானைச் சேர்ந்த காமா சியான் (114) கடந்த மே மாதம் 2 ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, உலகின் மிக மூத்த நபராக யூஜின் வந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, தற்போது, அமெரிக்காவின் செயிண்ட் லூசியானாவில் வசித்துவரும் யூனிஸ் சான்பிரான் (114) உலகின் மிக மூத்த நபராகியிருக்கிறார். இவர் கடந்த 1896 ம் ஆண்டு ஜூலை 20 தேதி பிறந்தார். யூஜினைவிட சில மாதங்கள் மட்டுமே இளையவராவார்.

கருத்துகள் இல்லை: