புதன், 3 நவம்பர், 2010

ஜெயலலிதாவின் நேர்மை, நாணயத்திற்கு காலம் பதில் சொல்லும்: முதல்வர்

சென்னை : "அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் நேர்மை, நாணயம், ஜனநாயகத்திற்கு காலம் தான் பதில் சொல்லும்' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை பற்றியும், நாணயத்தை பற்றியும், ஜனநாயகத்தை பற்றியும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன் 1.7.1991 அன்று அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஐந்தாண்டுகள் அவர் முதல்வராக ஆட்சி செய்ததற்கு பின் 30.4.1996ல் அவருடைய சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்.ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களின் மதிப்பு, 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 43 ரூபாய். இதுதான் ஜெயலலிதாவின் அகராதியில், "நாணயம்' என்பதற்கான அர்த்தமா? ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

சட்டத்தின் சந்து, பொந்துகளில் எல்லாம் புகுந்து கொண்டு, கின்னசில் இடம் பெறக் கூடிய அளவுக்கு, தனது சொத்துக்குவிப்பு வழக்கை கீழ்கோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை, பின் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கீழ்கோர்ட் வரை, "பரமபத சோபன' படத்தில் பார்ப்பதை போல மேலும் கீழும் இழுத்தடித்து, தனது நேர்மையை குறித்த காலத்தில் நிரூபிப்பதற்கு திராணியின்றி தாமதம் செய்து வருகிறாரே, இதுதான் "நேர்மை'க்கு அடையாளமா?முதல்வராக இருந்த போது, அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலையில் வாங்கி கொண்டாரே, இதுதான் "நேர்மை'க்கான அறிகுறியா?டான்சி நிலபேர வழக்கில், டான்சி நில சம்மந்தமான ஆவணங்களில் கையெழுத்துப் போட்டு விட்டு, வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, கோர்ட்டில் தான் போட்ட கையெழுத்தையே, தன்னுடைய கையெழுத்து இல்லை என சத்தியப் பிரமாணம் செய்து சொன்னாரே, இதுதான் "நாணயத்திற்கு' ஜெயலலிதா வழங்கும் சான்றிதழா?

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் பொறுப்பேற்ற உடனேயே, முதல் பணியாக சட்டசபையிலேயே ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய அநாகரிகப் போக்கும், அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் உறுதிமொழியை எடுத்து கொண்டதும், சட்டசபையிலே ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய கலாசார கேடும் அரங்கேற்றப்பட்டனவே, இதுதான் ஜெயலலிதா வழிகாட்டும் "ஜனநாயக'த்தின் பாதையா?முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால், நாளை கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்பர். பின் மற்ற சிறுபான்மையினரும் கேட்பர். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும் என்று, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான தனது எண்ணத்தை வெளிப்படுத்தியவர் ஜெயலலிதா.

"ஜனநாயகத்துக்கும், நாணயத்துக்கும் அவர் கொண்டிருக்கும் அர்த்தமும், அவர் பின்பற்றும் அணுகுமுறையும் கண்டு ஜனநாயகத்திலும், நேர்மை, நாணயத்திலும், குறைந்தபட்ச நம்பிக்கை கொண்டவர்கள் கூட, அதிகபட்சமாக நகைப்பர். செய்ய வேண்டியதை செய்யாமலும், செய்யக் கூடாததைச் செய்தும், முதல்வர் பொறுப்பையும், அதிகாரத்தையும் சொந்த சுயநல வேட்டைக்காகப் பயன்படுத்தியவர் ஜெயலலிதா.இன்றைக்கு ஜனநாயகம், நேர்மை, நாணயம் பற்றியெல்லாம் பேசுவதை நமது ஜனநாயக மாண்புகளிலே அக்கறையும், ஆர்வமும் உள்ளவர்கள் கவனித்து, கணித்து கொண்டு தான் இருக்கின்றனர். இவை அனைத்திற்கும் காலம் தான் பதில் சொல்லும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
km shamsudeen - ஷர்ஜாஹ்uae,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-03 14:49:19 IST
தயவு செய்து நீங்கள் பேசாதீர்கள். உங்களுக்கு அருகதையோ ஒன்றும் இல்லை . உன்னுடைய பேரன் 200 கோடிக்கு படம் எடுத்தாரே அது என்ன கணக்கு ....
சந்திரசேகரன் - Chennai,இந்தியா
2010-11-03 14:48:59 IST
யோவ் கைப்புள்ள - நீ என்ன வேணாலும் எழுது பேசு - ஆனா நர்சு கோகிலா கிட்ட மட்டும் ஒண்ணும் வச்சுக்காதே - அது என் ஆளு...
BABU AMEEN - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-03 14:40:51 IST
மஞ்சள் துண்டாரே வுங்கள் அறிக்கை வுங்களை காட்டி கொடுத்து விட்டது. 66 கோடி என்பது ஜுஜுபி, ஆனால் வுங்கள் குடும்பமோ கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி சுருட்டி ஏப்பம் விட்டுள்ளது. சிங்கப்பூரில்,இந்தோனேசியாவில், துபாயில் மற்றும் இந்தியாவின் மூளை முடுக்குகளில் எல்லாம் சொத்து குவித்துள்ள ஒரே அரசியல் குடும்பம் மஞ்சள் துண்டாரின் குடும்பம். வுண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் ஏன் ஆசியா கண்டத்திலேயே no 1 பணக்காரர் நீங்களும் வுங்கள் குடும்பமும்தான். வுங்கள் மருமகனும், பேரனும், கொள்ளு பேரனும் தயாரிக்கும் படங்கள் மற்றும் முதலீடுகளே போதும். வுங்களின் பணப் பேராசையை வூர் மக்கள் பேசி புளங்காகிதம் அடைகிறார்கள். வூழல் செய்வதில் கை தேர்ந்தவர் (நன்றி: சர்க்காரிய கமிஷன்) அதுவும் யாரும் சந்தேகம் கொள்ளாத அளவுக்கு செய்வது என்பது மிக மிக சாதுர்யமான, கொள்ளை அடிப்பதில் கை தேர்ந்தவர்கள் தான் செய்ய முடியும், ஆகையால் தாங்கள் ஜெயலலிதாவை குறை கூறுவது மிகுந்த நகைப்புக்குரியது. ராஜா கொண்டுவந்த கொடுத்த ஸ்பெக்ட்ரம் வூழல் பணம் ஒன்றே போதும் சிறு குழந்தை கூட சொல்லும் யார் வூழல் பெருச்சாளி என்று. இந்தோனேசியாவில் வுள்ள எல்லா நிலக்கரி சுரங்கங்களும், இந்தியாவில் வுள்ள எல்லா லாட்டரி (மார்டின் ஒருவரே சாட்சி ) நிறுவனங்களும் வுங்கள் குடும்பத்தாரின் கைப் பாவைகள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.இன்றைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்வோம். கிளறப்போனால் வந்து கொண்டே இருக்கும்....
சுரேஷ் - சென்னை,இந்தியா
2010-11-03 14:15:32 IST
நல்லா நாக்கைப் பிடுங்கி கொள்வது மாதிரி கேட்டு இருக்கிறீர்கள் ஐயா! ஆனா, அந்த புண்ணியவதிக்கு இதெல்லாம் உறைககாதே? மக்கள், மக்கள் என்று எதற்கு எடுத்தாலும் கூவுவாரே, அவர்களடமே சீரழந்தால்தான் புத்தி வரும்!...
கோவைக்காரன் - கோவை,இந்தியா
2010-11-03 13:58:36 IST
உண்மையிலேயே காலம் பதில் சொல்லும் என்றால் அது வரும் மே மாதம் தெரிந்துவிடும். மக்கள் உங்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவர். அதற்குள் உங்க கட்சியில் உட்கட்சி பூசல் வராமல் இருந்தால் சரி....
2010-11-03 13:55:07 IST
அன்று காலம் பதில் சொன்னதால்தான் எம் தலைவன் எம்ஜி ஆர் உள்ள வரை அவரால் ஆட்சிக்கு வருமுடியவில்லை. மகன்கள் மகள்கள் மருமகன் பேரன் பேத்தி என்று மாநிலத்திலும் மத்தியிலும் அதிகார எல்லைகளை விரிவு படுத்தி கோடி கோடிலாய் சொத்து சேர்க்கும் கருணாநிதிக்கு அம்மா ஆட்சிக்கு வந்தால் விசாரணை வைப்பார்களே என்ற பயம் காரணமாக இன்று அம்மாவை சொத்து தொடர்பாக கேள்வி கேட்கிறார். அவர் சொல்லும் காலம் வரத்தான் போகிறது. இல்வசங்களுக்கு மயங்காமல் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்புக்கு இன்றே தயாராய் கவிதை எழுதி வைக்கட்டும். ஆம். வருங்காலம் அம்மாவின் பொற்காலம். இதைத்தான் கோவையும் திருச்சியும் பின் மதுரையும் எடுத்து கூறின. அதை புரிந்து கொண்டுதான் கருணாநிதியும் இன்று புலம்ப தொடங்குகிறார். போக போக பார்போம் -சாமி...
மகேஷ் - உஅஎ,இந்தியா
2010-11-03 13:42:27 IST
ஒன் துருத்திய மட்டும் நீ ஊது....
வடிவேல்.K - pondicherry,இந்தியா
2010-11-03 13:40:38 IST
எல்லாமே uzhal கட்சிதான் உங்கள் ஓட்டுக்களை DMDK-VIJAYAKANTH PODUNGAL...
Selvam - ஜெநிலைMadurai,இந்தியா
2010-11-03 13:22:03 IST
ஐயா முதல்வரே ஜெயலலிதாவிடம் அரசியலுக்கு வருவதற்கு முன் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய் இருந்தது என்பதை நீரே சொல்றீர். ஆனால் உங்களிடம் என்ன இருந்தது கொஞ்சம் சொல்லுங்களே பார்போம். ட்ரெயினில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் கழிவறையில் பயணம் செய்து சென்னை வந்தீர். ஏன் இப்படி எல்லாம் செய்தி கொடுத்து உங்களின் மதிப்பை கணக்கிட சொல்றீர். Really we thought AMMA's Value more than which u given arr 66 cr. But now we are very very happy with J.ஜெயலலிதா Madam...
பாண்டியன் - மானாமதுரை,இந்தியா
2010-11-03 13:14:12 IST
ஐயா உங்க குடும்பத்துல எல்லாருக்கும் நிதின்னு பேரு முடியுதே அது ஏன்னு இந்த உலகம் உணர்ந்துடுச்சு ... ஊர் பயலுங்க நிதில உங்க குடும்பம் பொழப்பு நடத்துது அது உங்களுக்கு நெனைவுல என்னைக்கும் இருக்கணும்னு தான் , கருணாநிதி ,குணாநிதி அருள்நிதி கலாநிதி உதயநிதி தயாநிதினு பேரு ... ஹி ஹி ஹி இவரு அடுத்தவுங்கள சொல்றாராமா !!!...
mannan - madurai,இந்தியா
2010-11-03 12:51:41 IST
மாண்புமிகு முதல்வர் அவர்களே......நீங்கள் இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டை கடைந்தெடுத்த மடையர்களின் கூடாரம் ஆக்கிவிடீர்கள் ...உங்கள் இருவருடைய கையால் ஆகாத தனத்தினால் இன்று காவேரி , பாலாறு, மற்றும் முல்லை பெரியாறு மற்றும் கிருஷ்ணா என அடிப்படை ஆதாரமாம் ..தண்ணீர் பிரச்சனை கூட உங்களால் அரசியல் ஆகிவிட்டது..நீங்கள் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் என்பது ஆண்டு கால பொது வாழ்கையில் உள்ள ஒரு மன முதிர்ச்சி பெற்ற ஒருவர் சுய நலம் கருதாது தான் பிறந்த மண்ணுக்கும் தன்னையும் தனக்கு பின்னால் ஓராயிரம் தலைமுறையும் வாழ வழி செய்து கொடுத்த இந்த இனத்திற்கு , மேடையில், எழுத்தில் ,நீங்கள் விளிக்கும்,ஒரு ஒற்றை சொல்லுக்கு மகுடி பாம்பாய் அடங்கி போகும் அந்த தன்னலம் கருதாமல் உழைத்து உழைத்து உங்களை அழகு பார்க்கும் இந்த மக்களுக்கு , கையேந்தி பிழைக்கும் வித்தையை தவிற, தொலை நோக்கு திட்டங்கள் என்று அவர்கள் தங்கள் வாழ்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஒரு இனத்தின் மூத்த குடிமகனாய் தாங்கள் அரசியல் கலப்பின்றி, தேர்தலுககவோ , பதவி ஆசை இல்லாமலோ ,சுயநலம் கருதாமல் , பிறரை குற்றம் சொல்லாது, இந்த இனம் வாழ ஒரு எள் முனை அளவு முயற்சி எடுத்து இருப்பதாக உங்கள் மனசாட்சி படி சொல்ல முடியுமா?...
காஜா மொஹிதீன் - சவுதிarabia,இந்தியா
2010-11-03 12:45:42 IST
அன்புமிக்க தலைவ, உன் நாட்டில் பள்ளி குழந்தை இருவர் படுபாவிகளால் கடத்தி கொலை பட்டதை அறிந்தாய. இந்த அறிக்கை விடும் நேரத்தை பயன் படுத்தி நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து செயல் பட்டால், அது போதும்....
சிங்கம் - குஜராத்,இந்தியா
2010-11-03 12:40:42 IST
தலைவா நம்மள பத்தின விசயம் தமிழ் நாடு மக்களுக்கு நல்லாவே தெரியும். அதனால கொஞ்சம் அமுக்கி வாசிங்க, தேர்தல் வருது தலைவா ., தேர்தல் வருது ., அமுக்கி வாசி,அமுக்கி வாசி...
adalarasan - chennai,இந்தியா
2010-11-03 12:31:53 IST
தலைவர் கூறுவது உண்மைதான்! அதே போல் இவருடைய குடும்பத்தில்,மூன்று தலை முறைகளிடம், [ஒரு 50 பேர்கள் தேறும்] உள்ள சொத்துக்கள் கணக்கை சொல்ல முடியுமா? ஏன் குபபையை கிளருகிறார்! ஒரு தனி அதிகாரி நியமித்து,, இந்த கணக்குகள், வருமானவரி ,பதிகம் எல்லாவற்றையும் பார்தால் உண்மைகள் வெளிவரும்!அவன் ,அவன், காலேஜ், தொழிற்சாலை, என்று கருப்பு பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்!மக்களுக்கு தெரியும்!பூனைக்கு யார் மணி கட்டுவது!இவர் பேச்சு "நுழனும் தன வாயால் கெடும் என்ற பழமொழிதான்!...
Bala - Coimbatore,இந்தியா
2010-11-03 12:31:06 IST
எல்லாரும் யானையை பத்தி பேசுனா இந்தாளு பூனையை பத்தி பேசறாரு...
சுரேஷ் - சென்னை,இந்தியா
2010-11-03 12:10:27 IST
Karu..first u clean ur teeth and try to clean others..jaya is an actress and her mother was came from rich family only and her father was an lawyer.but what abt ur father and mother. all the people can have property and money without money nobody can give resepct. 100 crores is not a big money. but what abt 20 laksh crores in ur family acount very shame Mr .CM please resign ur job first....
ர.சௌந்தர் ராஜன் - kerala,இந்தியா
2010-11-03 12:05:24 IST
நேர்மை, நாணயம் பத்தி பேச ஜெயாவுக்கும் உங்களுக்கும் அருகதையே கிடையாது. நீங்கள் சொன்ன மாதிரி காலம் மட்டும் கண்டிப்பாக பதில் சொல்லும்....
சுரேஷ் - kanyakumari,இந்தியா
2010-11-03 12:04:07 IST
ஏன் மக்களை திசை திருப்புகிறீர்கள், இனி முடியாது ....
அ. தமிழன் - சென்னை,இந்தியா
2010-11-03 12:00:18 IST
என்ன சொல்றீங்க கே. ராசசேகரு, சென்னை?....என்ன சொல்றீங்க?....என்ன இப்படி சொல்லிப்புட்டிங்க?.....அறுவத்தினாலு கோடி ரூபா கலைஞர் வீட்டு நாயிக்கி பிசுக்கோத்து வாங்கிப் போடுற செலவா?....அப்படின்னா ஜெயலலிதாவை கலைஞர் வீட்டு நாய் கூடவா ஒப்பிடறீங்க?.....என்னதான் உங்களுக்கு உங்க தலைவி மேல கோவம் இருந்தாலும் இப்படியா கேவலமா "நாய்"-ன்ற லெவலுக்குக் கீழ்த் தரமாப் பேசுறது?....ஓஹோ...ஒரு வேளை டென்சன்ல என்ன சொல்றம்னு தெரியாம "உண்மை"யை சொல்லிப்புட்டீன்களோ?....நல்ல கருத்து உங்களோட கருத்து...உண்மையான கருத்து....வாழ்க...
சதீஷ்குமார் - திருப்பூர்,இந்தியா
2010-11-03 11:51:17 IST
ஜெயலிதாவின் நேர்மை ,நாணயம் பற்றி பேச உமக்கு என்ன யோக்யதை இருக்குது . ஒரு மஞ்ச பையோட சென்னை வந்த நீ இன்னைக்கு பலாயிரம் கோடிக்கு அதிபதி நீ நாணயமாக இருந்திருந்தால் இத்தனை கோடி எப்படி வந்தது ? வானத்திலேருந்து விழுந்ததா? எல்லாம் மக்களை ஏமாற்றி சுரண்டி சம்பாதித்தது ,இந்தியாவுக்கே ஊழல் (என்கிற கரப்பானை ) என்கிற சொல்லே உன்னால்தான் வந்தது .இன்று அந்த கரப்பான் இந்தியாவையே அழித்துக்கொண்டுஇருக்கிறது ....
ர.ரவிச்சந்திரன். - சென்னை.,இந்தியா
2010-11-03 11:50:15 IST
உன் முதுகை முதலில் பார்த்து விட்டு பிறகு அடுத்தவர்களை சொல்ல கற்று கொள். அடுத்த தேர்தலுக்கு இப்பவே தயார் ஆகிறாய் என்று தான் தோன்றுகிறது. விலைவாசி எங்கே போகிறது என்று பார், அதெல்லாம் உனக்கு புரியாது. உன் குடும்பம் தான் உனது குறிக்கோள் ஏதோ பழைய உனக்கு பிடித்த தலைவர்கள் பெயரை சொல்லி மக்களை எத்தனை காலம் இந்த தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவாய்.நீ முதலில் புதிய புதிய கோடி கோடி(பணம்)திட்டங்களை நிர்த்திகொள்.பிறரை குறை கூறுவதை நிறுத்தி விட்டு மக்களுக்கு இனிமேலாவது எதாவது செய்வதை பற்றி யோசி. ரேஷன் கடையில் லைனில் நிற்க வைக்காமல் விலை ஏற்றத்தை கட்டுபடுத்த பார்.ஒரு ரூபாய் சும்மா டிவி இதைல்லாம் கொடுத்து ஒட்டு மொத்த மக்களையும் ஏமாற்றதே.(எங்கடா யோசிக்கறது என்று நினைக்காமல் இனிமேலாவது சுயநலம் இல்லாமல் பொது நலன் நோக்கி...முடிந்தால் ...அல்லது....) நிறய தேர்தல் வரும் பார்த்து கொள்ளலாம் இதுவே உனக்கு ரொம்ப ரொம்ப அதிகம் ஏதோ உன் ராசி கடவுள் ச்சே ச்சே அப்படின்னா சும்மா சொத்து சேர்த்துகதுக்கு மட்டும் தான் யாரரோ கடவுளை நினைக்கறாங்க. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருடனை அல்ல நாட்டையும் திருத்த முடியாது இது பட்டுகோட்டையார் பாடல் நினைவிருக்கிறதா ஒரு நடிகனின் பாடல் அல்ல. மக்களால் மட்டுமே மாற்ற முடியும் மாற்றுவார்கள்....
Dheena - London,யுனைடெட் கிங்டம்
2010-11-03 11:47:01 IST
தமிழின கலைஞரே!! ஒரு ஜெயலலிதாவை சமாளிக்கலாம்... ஆனால் தமிழே தெரியாத உங்கள் குடும்பத்திலிருந்து நூறு கருணாநிதி அல்லவா ஊழல் செய்து தமிழ் நாட்டையே சுரண்டி கொண்டிருகின்றார்கள் !!! எனவே, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டையே உங்கள் குடும்பத்திற்கு அடிமை சாசனம் எழுத வேண்டியுள்ள சூழலை முறியடிக்கவே ஆட்சி மாற்றம் அவசியம்.. அதற்காக உங்கள் திருட்டு குடும்ப உறுப்பினர்களை கம்பிகளுக்கு பின்னல் அனுப்பும் ஒரே "IRON லேடி" ஜெயலலிதா தான்!!! அவர் தான் காலத்தின் கட்டாய அடுத்த முதல்வர் !!...
பாலா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-03 11:43:53 IST
யோக்கியன் வரான் ! சொம்பை எடுத்து உள்ளே வை !!...
Raja - Melur,இந்தியா
2010-11-03 11:38:28 IST
நண்பர்கள் கவனிக்கவும். ஸ்பெக்ட்ரம் வெறும் 1 லட்சம் கோடி இல்லை 1 இலட்சத்து 90 ஆயிரம் கோடி. அதை விடுங்க அந்த அம்மா சம்பாதித்த 66 கோடியில் 25 % இந்த அய்யாவுக்கு அனுப்ப சொல்லுங்க, இவர் சும்மா இருந்துடுவார்....
enmanakirukkalgal .blogspot .com - டென்வர்,யூ.எஸ்.ஏ
2010-11-03 11:33:07 IST
மக்கள் தீர்(ஆ)ப்பு கொடுக்கும் காலம் நெருங்கி விட்டது .......
புதியவன் ராஜ் - புதுதில்லி,இந்தியா
2010-11-03 11:28:55 IST
சமோசா என்ற பெயரில் கலைஞரை பழித்து எழுதி இருப்பவருக்கு: 1969 க்கு பிறகு, பொய் கஞ்சா வழக்கில் தனது அரசியல் அல்லது தனிப்பட்ட எதிரியை கைது செய்து சிறையில் அடைக்கும் அழவிற்கு ஈனபுத்தி எந்த முதல்வருக்கு இருந்தது? அரசியல் எதிரியை அதிகார துஷ்ப்ரயோகம் செய்து பொய்யான பொடா வழக்கில் கைது செய்து 19 மாதம் சிறையில் அடைத்த அநாகரீகத்தின் உச்சம் எந்த முதல்வரால் அரங்கேற்றப்பட்டது? ஒரு கட்சியை தீவிரவாத ஆதரவு கட்சி, அதை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முழங்கி விட்டு பின் அதே கட்சியுடன் வெட்கமில்லாமல் தேர்தல் கூட்டணி வைத்து போட்டியிட்ட அநாகரீகம் கபட நாடகம் ஆடிய முதல்வர் யார்? உங்கள் அரசியல் அறிவை வைத்து நேர்மையான பதில் சொல்லுங்கள்....
சுவாமிநாதன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-03 11:26:56 IST
ரொம்ப நல்லது கலைஞர் அய்யா.. ஆனா என்னோட இந்த சின்ன மூளைக்கு ஒரு விஷயம் புரியவே மாட்டேங்குது. உங்களோட எம்பி களுக்கு வேணுங்கற துறை வாங்க நீங்க டெல்லி வரைக்கும் போயி arm twist செய்து வேண்டியதை வாங்கிட்ட போது இருந்த வேகம், காவேரி நீர் பிரச்சனைக்கு ஏன் வரலை.இதையும் கொஞ்சம் விளக்கமா சொன்னா நாங்களும் கேட்டுக்குவோம்...
சீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-11-03 11:03:43 IST
ஆளாளுக்கு இந்த kuthu குத்தறீங்க, எந்த குத்தையும் தாங்கும் இதயம் உள்ளவரு பெரிசு. என்ன அவரோட இதயதுலே எல்லாருக்கும் இடம் கொடுத்துருக்காரு. ஆனா வீட்ல கேட்ர கூடாது அது அவருக்கு மட்டும் தான் , ஏன அவரு மாடு மேட்சி , உழுது , வேர்வை சிந்தி சம்பாதிச்சது ..ஹி ஹி ஹி ........
Chatriyan - Doha,கத்தார்
2010-11-03 11:01:40 IST
தமிழ் நாடு ஒரு லாலுவின் பீகார் அக மாறி வருவதற்கு கருணாநிதியும் அவரது குடும்பமும் + DMK தொண்டர்களும் தான் காரணம்....
KS - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-03 11:01:33 IST
Karunanidhi is the chief architect of looting public funds. He is capable of protecting his family property and funds . BUT HE IS AN ULTIMATE DESTROYER OF TAMILNADU. IF HE COMES TO POWER AGAIN TAMILNADU WILL BECOME HIS OWN FAMILY PROPERTY BY 2015. KARUNANIDHI IS THE ONLY POLITICIAN IN THE HISTORY OF TAMILNADU POLITICS WITH A PROVEN CORRUPTION CHARGES THRO SARKARIA COMMISSION. TODAY HE TALKS LIKE A GREAT MAHATHMA. SUCH A SHAMELESS SPECIMEN IS THE PRESENT CM KARUNANIDHI.........
A.M. Syed Ahmed - Riyadh,சவுதி அரேபியா
2010-11-03 10:56:42 IST
in Honesty both are same , we "Tamilan" are innocent and fools to forget everything & watch your comedy....
தியாகு - chennai,இந்தியா
2010-11-03 10:48:06 IST
உங்கள் ஆட்சியில் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி ஜாங்கிட்டுக்கு ஐநூறு கோடி ருபாய் சொத்து மற்றும் ராஜஸ்தானில் நூறு பஸ் ஓடுகிறது என்று ஜூனியர் விகடன் எழுதியதே பார்க்கவில்லையா? ( இப்போது ஜூவிக்கு திமுக சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்படுவதால் ஜாங்கிட்டை புகழ்கிறது அது வேற விஷயம் ) அந்த போலீஸ் அடிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஜெ வின் 66 கோடி எங்கே.. போலீஸ் அதிகாரியின் 500 கோடி எங்கே..இந்த ஒரு ஆளால் இவ்வளவு எனும்போது உங்கள் குடும்பத்தை நினைத்தால் தலை சுற்றுகிறது. பாவம் தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள். இது தான் வந்தாரை வாழவைக்கும் தமிழகமா?...
சோனி - திருவனந்தபுரம்,இந்தியா
2010-11-03 10:47:04 IST
எங்கோயோ யாரோ சொன்ன கதை. நம்ம தலைவரு சின்ன வயசு காலத்துல சேலத்தில கதை எழுதி பத்திரிக்கை ஆபீஸ் நடத்தினான்கலாம் , அப்போ கண்ணதாசன் தான் கணக்கு பிள்ளை , அப்போ மதியம் சாப்பாடுக்கு ஒரு வேளைக்கு முப்பது பைசா - அவரு சொல்லுவாரம் எப்படியாவது அந்த மும்பது பைசாவ ஆட்டைய போட்ராண்யா - நானும் கணக்குல விளக்கண்ணை வூத்தி பாத்தாலும் கண்டு புடிக்க முடியலன்னு புலம்புவராம - ஆளு அந்த வயசுலய அப்படி. இப்ப சொல்ல முடியுமா...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-11-03 10:43:13 IST
இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைதான். எந்த மட்டை அதிக நல்ல ஊறினது என்று எல்லாருக்கும் தெரியும்...
நாராயணன் - சென்னை,இந்தியா
2010-11-03 10:38:35 IST
நாணயம்-நா-நயம் 1 .நாணயம்-பணம்,நம்பகத்தன்மை 2 .நா-நயம்-பேச்சில் திறமை. நீங்க 2 வதில் சிறந்தவர் 1 .முதல் விசயத்தில் வல்லவர்.(முதல் பணக்காரன் ஆகவேண்டும் என்பதில் ) நம்பகத்தன்மை-இல்லாத நீ சொல்லகூடாத வார்த்தை....
உணர்வில்தமிழன் - chennai,இந்தியா
2010-11-03 10:15:25 IST
யோக்கியன் வந்துட்டாரு அந்த "சொம்பை" தூக்கி வீட்டுக்குள வையுங்க ! தாத்தா அடுத்தவங்க முதுகை பத்தி பேசுறதுக்கு முன்னாலா உங்க மண்டையில வழியுற சேத்தை முதல்ல பாருங்க ! ஸ்பெக்ட்ரம் "கூட்டு கொள்ளையில்" உங்கள் மகள் "மனம் கவர்ந்தவரின்" உதவியால் உங்கள் குடும்பத்தின் பத்து பரம்பரைக்கும் சொத்து சேத்து வச்சுட்டு - வெட்கமே இல்லாம ஊழல் புள்ளி விவரம் எடுத்து விடுறீங்களா ? நடுநிலை மக்கள் உங்கள் "குடும்ப கொள்ளைகளை" உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் இருகிறார்கள் ! அடுத்த வருஷம் முதல் உங்கள் குடும்பத்துக்கு மக்கள் "ஒய்வு" தர போவது உறுதி !...
நாராயணன் நடராஜன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்

கருத்துகள் இல்லை: