பாரிஸில் தமிழ்ச்செல்வனுக்கு சிலை. சிரிச்சு சிரிச்சு பிரபாகரன் செய்யிறதெல்லாவற்றையும் நியாயப்படுத்தி அரசியல் அறிக்கை விட்டு கடைசியாக யுத்தத்தில் மாண்டுபோன தமிழ்ச்செல்வனுக்கு சிலை. தமிழ்ச்செல்வனால் தமிழ்ச்சமூகம் என்ன நன்மை அடைந்தது.?. தமி;ழ்மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தமிழ்ச்செல்வன் என்ன செய்திருக்கிறார். வரலாறு தமிழ்ச்செல்வனை கொண்டாடும் வகையில் அவர் செய்த சாதனை என்ன என யோசித்துப்பார்த்தால் ஒண்டும் மண்டைக்குள் தட்டுப்படவில்லை. உண்ணாவிரதம் இருந்து செத்தப்போன திலீபனுக்கு வெளிநாட்டில் சிலை வைத்தால் அகிம்மைசப்போராட்டத்தை நடாத்தி மரணித்தவன் என்றாவது சொல்லலாம். சரி அதைவிடுவம் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்துக்கு கூட சிலை வைக்க முடியாத பாரிஸ் புலிகள் தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்தததைப் பார்த்தால் தமிழ்ச்செல்வனுக்கு வேண்டப்பட்டவர்கள் செய்த ஒரு செயலாகத்தான் படுகுது.
தமிழ்ச்செல்வனை முன்மாதிரியாக கொள்வதற்கு என்ன இருக்கிறது. ஒண்டுமில்லை. பாசிஸ்டுகளை ஆதரித்து அதனை நியாயப்படுத்தி ஆயிரக்கணக்கில் அநியாயமாக தமிழ்ச்சனத்தை புலிகொடுப்பதற்கு காரணமாக இருந்த ஒருவருக்கு சிலை வைக்க வேண்டிய தேவை தமிழ்மக்களுக்கு இல்லை. ஆனால் மண்டை கழண்ட புலிகளுக்கு ஏதாவது ஒன்றைச்செய்யவேணும். அதற்கு இப்படி ஏதாவது ஒன்றை செய்து விளம்பரப்படுத்துவது தேவையாக இருக்கலாம்.
திரும்பவும் சொல்கிற விடயம் என்னவெனில் இது தமிழ்ச்செல்வனுக்கு வேண்டப்பட்டவர்கள் செய்திருக்கும் வேலையே தவிர தமிழ்ச்சனம் இதனால் பெருமை கொள்ளும் விடயமில்லை. பாலசிங்கம் பாவம். அந்தாளுக்கு ஒருத்தரும் இல்லை. அவரைச்சார்ந்தவர்களும் இல்லை. அவருடைய துஷணப்பகிடிகளுக்கு விசிலடிச்ச கூட்டங்களும் இதைச் செய்யப்போவதில்லை. செத்துப்போன புலித்தலைவர்களுக்கு அவருடைய சொந்தங்கள் வேண்டப்பட்டவர்கள் எங்கேயாவது சிலை வைக்கலாம். நோர்வேயில் ஏராளமான இடங்கள் உண்டு.
சிலை வைப்பதற்கு தமிழ்ச்சமூகத்திற்கு ஏதாவது செய்துதான் ஆகவேண்டுமா என்ன?. எதுவும் செய்யத்தேவையில்லை. இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் கலைச்செல்வன் இறந்து போனார். அவரையும் வருடா வருடம் பெரிதாக விளம்பரப்படுத்தி நினைவு தினக்கூட்டங்கள் செய்தார்கள் கலைச்செல்வன் அப்படி பெரிதாக என்ன செய்தார் என மண்டையைப் போட்டு உடைத்து யோசனை செய்தும் எதுவும் தெரிஞ்ச மாதிரி இல்லை. இப்போ தமிழ்ச்செல்வன்…….. செல்வன்களுக்கு பாரிஸில் பரவாயில்லை.
பாசிசத்திற்கு எதிராக கருத்தால் வானொலியிலும் இணையத்திலும் போராடி அண்மையில் மரணித்த வை.சி கிருபானந்தன் செய்ததை விட இவர்கள் பெரிதாக ஒன்றும் வெட்டிக்கிழிக்கவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக