சனி, 18 ஏப்ரல், 2020

இப்ப லு லு vs தமிழச்சி விஷயத்துக்கு வருவோம் (அப்படீன்னா?)

Devi Somasundaram : ஒரு விஷயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு . வினை ,எதிர் வினை ..எதிர் வினை நியாயமான முறையில் இல்லன்னு சொன்னா அது வினைய ஆதரிப்பதா அர்த்தம் இல்லை..உதாரணமா மரண தண்டனைய எதிர்க்கிறோம் .அதனால வன்புணர்வ ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை ..எதிர் வினையும் வினை மாதிரியே தவறா இருக்குன்னு சொல்கிறோம் .
ஒரு கொலை நடந்து இருக்கு ,ஒருவர குற்றவாளின்னு சொல்றிங்கனு வச்சுப்போம் .அவர் போலியா குற்றம் சாட்டப் படுகிறார் .இது சரி இல்லன்னு சொன்னா அது கொலைக்கு ஆதரவா ? ...
நீ செய்றது தப்புன்னு சொன்னா உடனே நீ தப்ப ஆதரிக்கிறன்னு மடை மாத்றது பகுத்தறிவு இல்லை. நம்ம மேல பழி வந்துடும் ,நம் அறிவு கேள்வி குறி ஆகிடும் என்ற பதட்டம்.
அபிராமி விஷயத்தில் தம்பிகள் இதை தான் செய்தார்கள் .அபிராமி செய்த கொலைக்கு அவள் குடும்பமும் , சமூகம் கூட காரணம் என்று சொன்ன போது கொலைய ஆதரிக்கிற கொலைய ஆதரிக்கிறன்னு கூவுனாங்க ..
இங்க நல்லவன் மாதிரி கூவிட்டு சைல்ட் போர்ன் பாக்ற சில்றைக்ள விட்றுவோம் . அவர்கள் தீர்வ தேடுபவர் இல்லை ..தன் தப்புக்கு இன்னொருத்தர கை காட்ற யோக்கிய சிகாமணிகள் ...
இப்ப லு லு vs தமிழச்சி விஷயத்துக்கு வருவோம் ...
நீ லு லு வ ஆதரிக்கிறன்னு மடை மாற்றியதன் மூலம் தமிழச்சியோட தவற நியாயப்படுத்தும் செயலை செய்தவர்களுக்கு கடைசி வரை அவர்கள் தப்பு புரிய போவதில்ல்லை .
சரி இத்தனை சமூக அக்கறை உள்ள இவர்கள் எவனாச்சும் குடிக்கிறேன்னு போஸ்ட் போட்டப்ப குடிக்காத நல்லதில்லன்னு சொன்னார்களா ? .ஏன் சொல்லவில்லை.

யாராச்சும் கெட்டவார்த்தை போஸ்ட் போட்டப்ப கெட்ட வார்த்தை பேசாதன்னு சொன்னார்களா ..ஏன் சொல்லவில்லை ..
பக்கத்து வீட்டு ஆண்ட்டிய
சைட் அடிச்சேன்னு போஸ்ட் போட்டப்ப அவர் உன் அம்மா மாதிரி இப்டி கேவலமா பேசாதன்னு ஏன் சொல்லவில்லை ...
சமூக அக்கறைன்னா அத அப்பவே அவர்களிடமே பேசனும்...அப்ப கம்முன்னு இருந்துட்டு இப்ப கும்பல்ல கோவிந்தா போடறது பேர் சமூக அக்கறை இல்லை ..சுய விளம்பரம்.
இதை தான லு லு வும் செய்தார் .குடிச்சார், கெட்ட வார்த்தை பேசினார், வேறு ஆணை ரசிச்சேன்னு எழுதினார் ..
யாரோ குடிச்சேனு போஸ்ட் போட்டப்ப வராத அறச்சீற்றம் , யாரோ பக்கத்து வீட்டு ஆண்ட்டிய சைட் அடிச்ச்ப்ப வராத அறச்சீற்றம் ,யாரோ கெட்டவார்த்தை பேசினப்ப வராத அறச்சீற்றம் லுலு கிட்ட மட்டும் ஏன் வருது ..இதை கேட்டா திரும்ப முதல்வரி தான் ...மரண தண்டனை எதிர்த்தா வன்புணர்வ ஆதரிக்கிறியா டோலின்னு ஒரு அரைகுறை வாதம் மாதிரியே வருவன்னு எனக்கு தெரியும் .
நான் இந்த 20+ ஆண்கள் பேசர அரசியல பெரிசா எடுத்துகறதில்ல ...அமலா அண்ணன் சொல்வார் ...கல்யாணம் ஆனதும் இந்த போராளி பய முழுக்க காணா போய்டறான்னு ..அது தான் நிஜம்...20 + அரசியல்ல முக்காவாசி இந்த தாணும் கவனிக்கப்படனும்னு நடுரோட்ல பைக் ஸ்டண்ட் செய்ற் மாதிரி தான். .( அதனால தான் எனக்கு சம வயது ஆட்களோட லவ்வே வர மாட்டேங்குது போல 😞) .
கல்யாணம் ,குழந்தை, குடும்பம்னு அடிபட்ட பின் தெளிவான மனனிலைக்கு வந்த ஆண் பேசற அரசியல்ல இருக்கும் நிதானம் இவர்களிடம் இருப்பதில்லை ..
சரி அதை விட்றுவோம்...
பிரச்சனைக்கு தீர்வுன்னு ஒன்னு இருக்குல்ல்..
பெரிதாரியம் பேசும் பெண்கள் எப்படி நடந்துக்கனும் ? ...இதை இப்ப சொன்னா நானும் கும்பல்ல கோவிந்தா போடும் நபர் ஆகிடுவேன்..கிட்ட தட்ட என்னை நல்லவ னு காட்டிகிற மனனிலை ஆகிடும் .
ஆனா நான் எதையும் முன் கூட்டியே பேசும் பழக்கம.
பெரியாரியம் பேசும் பெண்கள் எப்படி நடந்துக்கனும் என்று கனிமொழி மேம் ( அந்த கனிமொழி இல்ல ...நம்ம முகனூல் போராளி கனிமொழி எம் வி ..கனிமொழின்னு பேர் வச்சவங்க எல்லாம் தெளிவான அரசியல் பேச்றாங்க...கலைஞர் வச்ச பேர் ராசியோ 😍) .. போட்ட போஸ்ட் ஒன்னு நான் ஷேர் செய்து இருந்தேன்...(.நீ செய்து இருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்...ஏன் என்றால் உன் சமூக அக்கறை நாங்க கும்பலா தான் பேசுவோம் பிரியட் தான்) ...அதை இப்ப போட்டா நானும் நல்லவ தான்னு காட்டிகிற அதே சில்ற தனம் ஆகிடும்...நீங்களே தேடி புடிச்சு படிச்சுக்கங்க

கருத்துகள் இல்லை: