புதன், 15 ஏப்ரல், 2020

தமிழகத்தில் மட்டும்தான் அதிக மருத்துவர்கள் கிராமங்களில் ..

மறைந்த டாக்டர் ஜெயமோகன்
நிலையங்களில் மருத்துவர்கள் வேலைக்கு சேர்வதேயில்லை .
 சில மாநிலங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் ஆர்வமாக வேலை செய்வதில்லை காரணம் அவர்கள் எல்லாம் பெரும்பாலும் நகர பின்புலத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
நுழைவுத்தேர்வில் வெற்றி பெற நகர பின்புலம் அவசியம் என்பதால் பிற மாநிலங்களில் இருந்து எம்.பி.பி.எஸ் படிப்பவர்களில் பெரும்பாலானோர் நகரவாசிகள் எனவே அவர்கள் கிராமங்களில் பணிபுரிய தயாரில்லை .
ஆனால் தமிழகத்தின் நிலை முற்றிலும் வேறு இங்கு, 2017 வரை கிராமங்களில் இருந்து, எளிய பிண்ணனியில் இருந்து வந்த மாணவர்களே அதிகம் . எனவே அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேலைக்கு செல்ல தயங்கியதே இல்லை
மேலும் அங்கு சென்ற பிறகு “ஒப்புக்கு சப்பாக” “ஏனோ தானோ என்று” வேலை பார்க்காமல் தொடர்ந்து மருத்துவத்துறையை முன்னேற்றுவது குறித்து சிந்தித்து கொண்டே இருப்பார்கள். இதனால் தான் தமிழக மருத்துவத்துறை கடந்த சில ஆண்டுகளாக அசூர வளர்ச்சி பெற்றுள்ளது. ; பல மாநிலங்களில் அரசு ஆரம்ப சுகாதார கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்திற்கு கிழக்கில் இருக்கும் ஒரு சிறு கிராமம் சிறுமுகை சவுத் இந்திய விஸ்கோஸ் (எஸ்.ஐ.வி) தொழிற்சாலை முழூ வீச்சில் இருந்த காலத்தில் பரபரப்பாக இருந்த ஊர் அதன் பிறகு பொலிவிழந்துவிட்டது.

அந்த குக்கிராமத்தில் இருந்து, அதே ஊரில் இருந்த பள்ளியில் படித்து 1200க்கு 1179 எடுத்து மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்தவர் ஜெயமோகன்
மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த பிறகு
ஊட்டி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்து வந்தார்
தனது சுகாதார நிலைய பணியாளர்களை ஊக்குவித்து, நிலைய செயல்பாடுகளை தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டிருந்தார்
இன்று அவர் நோயால் மரணம் என்ற செய்தி வருகிறது 😞
-oOo-
சிறு கிராமத்தில் இருந்து படித்து
1200க்கு 1179 எடுத்து
மாநில அளவில் மூன்றாவது ரேங்க் எடுத்து
எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்து
சேவையை உயர்த்துவது குறித்து தொடர்ந்து சிந்தித்து செயல்பட்டு
வரும் இவரைப்போன்ற பல ஆயிரம் மருத்துவர்களால் தான்
இன்று உங்கள் குழந்தைக்கு போலியோ இல்லை
உங்கள் சகோதரிக்கு பிரசவத்தில் ரன ஜன்னி வரவில்லை
என்பது உங்களுக்கு தெரியுமா
இதுவரை தெரியவில்லை என்றால்
இதை வாசித்த பிறகாவது
என்பதை உணர்ந்து கொள்வீர்களா மக்களே
-oOo-
இதன் பிறகும்
“12ஆவதில் ரேங்க் எடுத்தவர்கள் சேவை செய்கிறார்களா”
“12ஆவது மதிப்பெண் மூலம் மருத்துவம் சேர்வது நாமக்கல் மக்கள் தான்”
“அரசு மருத்துவமனையில் யாரும் பணிசெய்வதில்லை”
போன்ற பொய்களை கூச்சம் இல்லாமல் சொல்லாதீர்கள் ....
Dr Mariano Anto Bruno

கருத்துகள் இல்லை: