
இதற்கிடையில் கடந்த மாதம் கரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடி கட்டண வசூல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்தார்.
மேலும் இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்வதில் தடங்கல் இல்லாமல் இருப்பதோடு, நேரத்தை மிச்சப்படுத்தவும் முடியும் என தெரிவித்தார்.
தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில், ஏப்ரல் 20ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக