ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

ஊரடங்கால் உணவு இல்லை: 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் !

தினமலர் : : லக்னோ: நாட்டில் நடந்து வரும் ஊரடங்கால் தனது குழந்தைகளுக்கு உணவு இல்லை என்ற விரக்தியில் 5 குழந்தைகளையும் கங்கை நதியில் வீசி உள்ளார்..
உ.பி., மாநிலம் பாதோகி மாவட்டத்தை சேர்ந்த பெண். பெயர் விவரம் ஏதும் போலீசார் வெளியிடவில்லை. கடந்த 18 நாட்களாக கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டாலும் உயிர் தான் முக்கியம். ஊரடங்கை பின்பற்றியதால் தான் இந்தியாவில் இந்த அளவுக்கு உயிர்ப்பலி குறைந்த விகிதத்தில் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இருப்பினும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் பிரதமர் மோடியே இந்த முடிவு எடுத்தமைக்கு மன்னிப்பும் கோரினார்.
 அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஆவன செய்வோம் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
(வழக்கம் போல பாஜக அரசின்  இது போன்ற அறிவிப்புக்கள் எதுவும் நம்புவதற்கு உரியதாக இல்லை  என்பதே ஏழை  மக்களின் அனுபவமாக உள்ளது . எனவே இந்த தாய் இந்த முடிவை எடுத்துள்ளார் ) பாதோகி மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்த ஒரு தாய் தனது 5 குழந்தைகளையும் கங்கை நதியில் மூழ்கடித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கங்கை நதியில் மூழ்கிய குழந்தைகளை தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையில் இந்த பெண் ஏழ்மையான குடும்பம். மேலும் தினக்கூலி வேலைக்கு செல்லும் இவர் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் இந்த கோர முடிவை எடுத்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை: