புதன், 15 ஏப்ரல், 2020

கொரோனா நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பதால் அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடிகின்றது- சிஎன்என்

கொரோனா நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பதால் அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடிகின்றது- சிஎன்என் veerakesari.lk : வெள்ளிக்கிழமை மருத்துவர் மங்களா நரசிம்மனிற்கு அவசர அழைப்பொன்று வந்தது. 40 வயது , கொரோனாவைரஸ் நோயாளியொருவர் ஆபத்தான நிலையிலிருந்தார். லோங்ஐலண்ட் யூவிஸ் மருத்துவமனையிலிருந்த அவரது சகாக்கள் அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக்கருவியை வழங்கவேண்டுமா என வந்து பார்க்குமாறு அவரை கேட்டுக்கொண்டனர்.
நான் அங்கு வருவதற்கு முன்னர் அந்த நோயாளியை குப்புறபடுக்கவையுங்கள்  ஏதாவது முன்னேற்றம் ஏற்படுகின்றதா என பார்ப்போம் என நரசிம்மன் தனது சக மருத்துவரிடம் தெரிவித்தார்.
நரசிம்மன் ஐசியூவிற்கு செல்லவில்லை ஆனால் அவரது முயற்சி வெற்றியளித்தது.
நோயாளிகளை  குப்புறப்படுக்கவைப்பது,அவர்கள் தங்களிற்கு தேவையாக உள்ள அதிகளவான ஒக்சிசனை பெற்றுக்கொள்ள உதவுகின்றது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாங்கள் இதன் மூலம் நூறுவீதம் உயிர்களை காப்பாற்றுகின்றோம் என நரசிம்மன் தெரிவித்தார் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.
நரசிம்மன் நியுயோர்க்கில் 23 மருத்துவமனைகளை கொண்டுள்ள நோர்த்வெல்ஸ் கெயரின் அவசரசேவை பிரிவின் பிராந்திய இயக்குநராக பணியாற்றுகின்றார்

இது மிகவும் இலகுவாக செய்யக்கூடிய விடயம்,நாங்கள் மிகச்சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளோம்,ஒவ்வொரு நோயாளியிலும் இதனை நாங்கள் செய்து பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பலனளிப்பதை பார்த்ததும் நீங்கள் இதனை அதிகம் பயன்படுத்த விரும்புவீர்கள் என  குறிப்பிட்டுள்ள கதிரேன் கிப்பேர்ட் என்ற மருத்துவர் இது உடனடியாக பலனளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நோயளிகள் – கடுமையான சுவாச நோய் பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர்,காய்ச்சல் நிமோனியா போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிற்கும் இது பொருந்தும்.
ஏழு வருடத்திற்கு முன்னர்  பிரான்சின் மருத்துவர்கள் வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புறபடுக்கவைத்தால் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு குறைவு என தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் அமெரிக்க மருத்துவர்கள் நோயாளிகளிற்கு இந்த முறையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனவைரஸ் நோயாளிகள் மத்தியில் அவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.அது பலனளிக்க ஆரம்பித்துள்ளது.

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நோயாளி குப்புறப்படுக்கவைக்கப்பட்டவேளை அவரது குருதியில் ஒக்சிசன் 85 வீதத்திலிருந்து 98 வீதமாக அதிகரித்தது.
இந்த முறை காரணமாக நுரையீரலிற்கு ஒக்சிசன் செல்வது இலகுவாகின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வென்டிலேட்டரில் உள்ள நோயாளிளை  குப்புறப்படுக்கவைப்பதால் சில பிரச்சினைகளும் உள்ளன.அவ்வேளை அவர்களிற்கு அதிக மயக்கமருந்துகள் அவசியம் அதனால் அவர்கள் அதிக நேரம் ஐசியூவில் இருக்கவேண்டிய நிலையேற்படுகின்றது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை: